ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா மோசடிக்கும் என்ன சம்பந்தம்? சிக்கும் பாஜகவினர்? சசிகாந்த் செந்தில்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் பாஜகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இந்த கொலையில் பாஜக கதற வேண்டியதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டிரைப்ஸ் இணையதளத்திற்கு திருவள்ளூர் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கிரிமினல் என விமர்சிக்கும் போதே ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் அவருக்கு ஏதோ பிரச்சினையிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

எங்கள் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மிகவும் தெளிவான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது ஆரூத்ரா மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு பாஜக கதற வேண்டியதற்கான காரணம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்பது விசாரணையில் தெரியவரும்.
ஆருத்ரா மோசடியையே பாஜக மூட பார்க்கிறார்கள். ஆனால் இந்த மோசடியில் பாஜகவினருக்கும் தொடர்பிருக்கிறது என தெரிந்தே, அவர்களை வளர்த்துவிட்டிருக்கிறார்கள், அந்த மோசடியை மூடி மறைக்க பார்க்கிறார்கள். இது குறித்து செல்வப்பெருந்தகை கேட்டதால் ஏற்பட்ட எரிச்சலில்தான் அவரை கிரிமினல் என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
நாங்கள் அண்ணாமலைக்கு சொல்வது என்னவென்றால் நீங்கள் என்னதான் சுற்றி அடித்தாலும் நாங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் என்ன என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்க போகிறோம். நீங்கள் எங்களை மடைமாற்றி லெப்ட்ல் இன்டிகேட்டரை போல் ரைட்ல கையை காட்டி வண்டியை நேராக ஓட்டுவதை எல்லாம் நாங்கள் ரொம்ப நாளாக பார்த்திருக்கிறோம்.
ஆருத்ரா மோசடிக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு சம்பந்தமில்லை என அவர் பதில் சொல்லட்டும். அராஜகம் செய்து கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும், தமிழகத்தையும் ஒப்பிடவே முடியாது. பாஜகவில் ரவுடிகள்தான் உறுப்பினர்களாகவும் கட்சி பொறுப்பிலும் இருக்கிறார்கள்.
ரவுடிகள் பட்டியலை வெளியிடுவதை விட ரவுடிகள் அல்லாதோரின் பட்டியலை வெளியிட்டால் எளிதாக இருக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சமூகநீதி கிடைக்கவில்லை. ஜாதி எனும் கட்டமைப்பை முற்றிலும் உடைப்பதற்கான முயற்சிகளை பெரிய அளவில் எந்த மாநிலத்திலும் எடுக்கவில்லை. இவ்வாறு சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள்தான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்தார். இதற்கு அண்ணாமலை, செல்வப்பெருந்தகையை கிரிமினல் என்றும் அவர் மீது குண்டாஸ் வழக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக செல்வப்பெருந்தகை, பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னல்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications