சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசுப் பணி - வேதனையில் இருந்து மீள வேலை கொடுத்த அரசு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடுத்துள்ளார். வேதனையில் இருந்து மீள அரசு வேலை கொடுத்த

Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளம் காவல்நிலையில் போலீஸ் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்த ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். வேதனையோடு இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீள அரசு வேலை தந்துள்ளது என்று பெர்சி கூறியுள்ளார். நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பெர்சி.

சாத்தான்குளத்தில் செல்போன் கடைவைத்திருந்த ஜெயராஜூம் பென்னிக்ஸ்க்கு லாக்டவுன் விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

Sathankulam Jayarajs daughter gets Government job

தந்தை, மகன் மரணத்திற்கு நீதிகேட்டு தென்மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. உறவினர்களின் போராட்டம் இந்திய அளவில் தெரியவந்தது. காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள், ஏட்டு முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி வரை அனைவருமே ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மதுரை ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

எதிர்கட்சியினர் இந்த விசயத்தை கையில் எடுக்கவே, விசயத்தின் வீரியத்தை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். எங்களுக்கு வேலையோ பணமோ வேண்டாம், நீதி வேண்டும் என்று கூறினார் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி.

நடிகை விஜயலட்சுமி திடீர் தற்கொலை முயற்சி.. விரைந்து சென்ற மீட்ட போலீஸ்.. மருத்துவமனையில் அனுமதிநடிகை விஜயலட்சுமி திடீர் தற்கொலை முயற்சி.. விரைந்து சென்ற மீட்ட போலீஸ்.. மருத்துவமனையில் அனுமதி

தந்தை மகன் மரண வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார். தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வேலை கொடுத்த அரசுக்கு நன்றி, இருவரை இழந்து வேதனையில் இருக்கும் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்துள்ளது. இருவரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

English summary
Chief Minister Edappadi Palanichamy today handed over a government appointment order to Percy, daughter of Sathankulam Jayaraj, at the General Secretariat today. Percy said the government has given jobs to those in distress to recover from it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X