"க்ளூ" கிடைச்சாச்சு.. "செத்துப்போ".. துண்டாக சிதறிய சத்யா.. மாணவி அம்மாவிடம் சிபிசிஐடி இன்று விசாரணை
இளம்பெண் சத்யாவை கொன்ற சதீஷ் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன
சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷை, சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே, மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்ட சிசிடிவி வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் தமிழக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.. ஒருதலைக்காதலால், ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்தார் சதீஷ்..
ட்ரெயின் கிட்ட வருவது தெரிந்துதான், செத்து போ என்று சொல்லி கொண்டே சத்யாவை தள்ளி விட்டிருக்கிறான்.. இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது.

ஸ்விட்ச் ஆப்
அதற்கு பிறகு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்குவிட்டு, செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, பிறகு வீட்டில் இருந்து வெளியே தப்பிஉள்ளான்.. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்துதான், சதீஷை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் சிறைகாவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.. எனினும் சத்யா - சதீஷ் குறித்த தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தவாறே உள்ளது.. சத்யாவுக்கு 14 வயது இருக்கும்போதே, தன் காதல் வேலையை ஆரம்பித்துள்ளார் சதீஷ்..

போராளி தொப்பி
ஒருகட்டத்தில் சதீஷை சத்யாவும் காதலித்த நிலையில், அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவும், விலக ஆரம்பித்துள்ளார்.. இதனால், பின்னாடியே அவரை விரட்டி விரட்டி சென்று காதல் டார்ச்சர் செய்து, கடைசியில் கொலை வரை சென்றுவிட்டது. கஞ்சா மற்றும் போதைப்பழக்கத்துக்கு அடிமையான சதீஷின் அனைத்து நடவடிக்கைகளும் அவரது அப்பாவுக்கு தெரிந்தும், சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த அவர், தன் மகனை ஒருநாளும் கண்டிக்கவேயில்லை என்கிறார்கள். போலீஸ்காரர் வீட்டு பிள்ளை என்பதால், அந்த ஏரியாவில் உள்ள மற்ற போலீசாரும் சதீஷின் சேட்டைகளை கண்டுகொள்ளாமல் உள்ளதாக கூறுகிறார்கள்..

சைக்கோ சதீஷ்
3 மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு லவ் டார்ச்சர் தரும்போதுகூட, காலேஜ் வாசலிலேயே சத்யாவின் தலைமுடியை இழுத்து அடித்து, ஒரு சைக்கோ போல நடந்து கொண்டாராம். 32வயதான சதீஷ், 22 வயதான சத்யாவை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதால், இந்த டார்ச்சர் தொடர்பாக போலீசில் 3 முறை சத்யா குடும்பத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். 2 தரப்பினரையும் அழைத்து பேசி போலீசாரே கட்டப்பஞ்சாயத்து செய்து, இவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்களாம்.. இது தற்போது சிக்கலாக உருவெடுத்துள்ளது.

செக்யூரிட்டிகள்
அதேபோல, அன்று சுவாதி, ஸ்வேதா, இன்று சத்யா என கொடூர கொலைகளால், ரயில்நிலையங்களின் பாதுகாப்பு என்ன என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் விசாரணை நடத்த உள்ளனர்.. மகள் ரயிலில் தள்ளிவிடப்பட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததுமே, ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிய அவரது அப்பா மாணிக்கம் அன்றுஇரவே விஷத்தை குடித்து இறந்துவிட்டார்.. தலைமைக்காவலரான, சத்யாவின் அம்மா ராமலட்சுமி மார்பக புற்றுநோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் படுத்த படுக்கையாக வெளியே வர முடியாத சூழலில் தவித்து வருகிறார்..

சைலேந்திர பாபு
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அது தொடர்பான விசாரணை நடக்க உள்ளது.. இதையடுத்து, ரயில்வே போலீஸார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை, சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்... சம்பவம் நடந்த அன்றே, பரங்கிமலை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார், ஆய்வு மேற்கொண்டனர்.. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தினர். பிறகு, ரயில் நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்பட்டம்
அந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, அதில் சதீஷ், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக சொல்கிறார்கள்.. இப்போது, முதல்கட்ட விசாரணைமுடிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக மாணவியின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில்பார்த்து தனியார் டிவிகள், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில், சத்யாவின் அம்மா, ராமலட்சுமி, மற்றும் உறவினர்கள், அருகில் வசிப்பவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து, மாணவி படித்த காலேஜிலும், அவரது தோழிகளிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஃபாலோயிங்
பின்னர், சதீஷின் குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.. இதைதவிர, இளைஞர் சதீஷ், மாணவி சத்யாவை, பின்னாடியே சென்றது முதல் அவரை ரயில் முன்பு தள்ளிவிட்டது வரையிலான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீஸார் திரட்டி வைத்துள்ளனர்.. வரும் வாரத்தில் சதீஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து, விரைவில் சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என்று சிபிசிஐடி போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications