"செத்து ஒழி".. பரிதாப சத்யா.. கட்டப்பஞ்சாயத்து வேறயா.. "போராளி" தொப்பியும், ஊதாரி சதீஷூம்.. அடகடவுளே

இளம்பெண் சத்யாவை கொன்ற சதீஷ் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யாவை கொன்ற சதீஷ் இப்போது ஜெயிலில் இருந்தாலும், இதற்கெல்லாம் காரணம், அவரது அப்பா தந்த அளவுக்கு அதிகமான செல்லம்தான் என்றும், மகனை கண்டிக்காமலேயே விட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் தமிழக மக்களை உலுக்கி எடுத்துவருகிறது.. ஒருதலைக்காதலால், ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்துள்ளார் சதீஷ்..

இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறியது காண்போரை நிலைகுலைய வைத்தது.

 முகம் எங்கே?

முகம் எங்கே?

நேற்று மாலை சதீஷை போலீசார் கைது செய்து, சதீஷை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, சதீஷை பார்த்ததுமே, அங்கிருந்த சில வழக்கறிஞர்கள் ஆத்திரத்தில் அடிக்க பாய்ந்தார்கள்.. "இவன் முகத்தை ஏன் மறைச்சு கூட்டிட்டு வர்றீங்க... ஒரு கொலையை செய்துவிட்டு, அந்த கொலையின் காரணமாக, அந்த பெண்ணின் அப்பாவும் உயிரிழந்த நிலையில், கொலையாளி மீது எவ்வித தாக்குதலும் நடத்தாமல், தண்டனையும் தராமல், இவ்வளவு பத்திரமாக அழைத்து வருவது ஏன்? முகத்தை காட்டாமல் ஏன் கூட்டிட்டு போறீங்க?" என்று ஆவேசமாக கேள்விகள் எழுப்பியதால் கோர்ட்டிலேயே பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாய்மாமா

தாய்மாமா

கடந்த 2 நாட்களாகவே இதுகுறித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்தும், இவர்கள் 2 குடும்பத்தினர் குறித்தும் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. சத்யாவுக்கு 14 வயது இருக்கும்போதே, தன் காதல் வேலையை ஆரம்பித்துவிட்டாராம் சதீஷ்.. பின்னாடியே அவரை விரட்டி விரட்டி சென்று காதல் செய்வதாக சொல்லி வந்துள்ளார்.. இந்த விஷயம் சதீஷின் அப்பாவுக்கு அப்போதே தெரிந்தும், சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த அவர், தன் மகனை ஒருநாளும் கண்டிக்கவேயில்லை என்கிறார்கள்.

ஊதாரி

ஊதாரி

போதாக்குறைக்கு, கை நிறைய பணம் சதீஷிடம் புழங்கி வந்துள்ள நிலையில், பெற்றோர் கண்டிக்காமல் விட்டதும், கடைசியில் போதை பழக்கம்வரை கொண்டு போய் நிறுத்திவிட்டதாம்.. தினமும் காலேஜ் முடிந்து சத்யா சாயங்காலம் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அங்கிருக்கும் ஒரு மெக்கானிக் கடையில் சதீஷ் காத்துக் கொண்டே இருப்பாராம்.. ஆர்-ஒன்-பைவ் பைக் ஒன்றை சதீஷ் வைத்துள்ளார்.. அந்த பைக்கில்தான் சத்யாவை விரட்டி தொல்லை தந்திருக்கிறார்.. போலீஸ்காரர் வீட்டு பிள்ளை என்பதால், அந்த ஏரியாவில் உள்ள மற்ற போலீசாரும் சதீஷின் சேட்டைகளை கண்டுகொள்ளாமல் உள்ளதாக கூறுகிறார்கள்.

 சின்ன வயசு

சின்ன வயசு

சின்ன வயசு என்றாலும், சதீஷூக்கு தலையில் முடி அவ்வளவாக இல்லை.. தன்னிடம் உள்ள இந்த குறையை மறைக்கவே எப்போதும் கருப்பு தொப்பியை அணிந்து கொள்வாராம்.. அதுவும் தன்னை ஒரு போராளி போல காட்டிக் கொள்ள கருப்பு கலர் தொப்பியை மட்டுமே அணிவாராம்.. 3 மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு லவ் டார்ச்சர் தரும்போதுகூட, காலேஜ் வாசலிலேயே சத்யாவின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.. கிட்டத்தட்ட அப்போதே இவர் ஒரு சைக்கோ போல நடந்து கொண்டதாக நேரடியாக சம்பவத்தை பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

 செத்து ஒழி

செத்து ஒழி

சம்பவத்தன்று, சத்யா தன்னுடைய தோழிகளுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அதை தூரமாக நின்று நோட்டமிட்டு வந்துள்ளான்.. செல்போனில் பேசுவதைபோல தூரமாக நின்றுகொண்டே சத்யாவை கண்காணித்து கொண்டே இருந்துள்ளான்.. ட்ரெயின் கிட்ட வருவது தெரிந்துதான், செத்து போ என்று சொல்லி கொண்டே சத்யாவை தள்ளி விட்டிருக்கிறான்.. அதற்கு பிறகு பைக்கை எடுத்துக் கெண்டு வீட்டுக்கு வீட்டு, செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, பிறகு வீட்டில் இருந்து வெளியே தப்பிஉள்ளான்.. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்துதான், சதீஷை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.. "போராளி" போல கெத்து காட்ட உதவிய, அதே தொப்பிதான் சதீஷை போலீசாருக்கு காட்டி தந்துள்ளதாக தெரிகிறது.

 கட்டப்பஞ்சாயத்து

கட்டப்பஞ்சாயத்து

32வயதான சதீஷ், 22 வயதான சத்யாவை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதால், இதுதொடர்பாக போலீசில் 2 முறை புகார் தந்தார்களாம்.. ஆனால், போலீஸார், சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்காமல், 2 தரப்பினரையும் அழைத்து பேசி கட்டப்பஞ்சாயத்து செய்து, இவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்களாம்.. அதேபோல, கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையில் சதீஷ் சத்யாவின் தலைமுடியை இழுத்து பிடித்து தாக்கியது தொடர்பாகவும், அவரது பெற்றோர் போலீசில் புகார் தந்துள்ளனர்..

 3 கம்ப்ளைண்ட்

3 கம்ப்ளைண்ட்

அந்த புகாரின்பேரிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சதீஷை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு வெளியே விட்டார்களாம்.. இந்த நெருக்கடியில்தான், சத்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர், வேறொரு நபருடன் திருமணம் பேசி முடித்துள்ளனர்..,. ஆக, சத்யா குடும்பத்தார் தரப்பில் சதீஷ் மீது இதுவரை 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஏன் என்ற கேள்விதான், தற்போது விஸ்வரூபமெடுத்து வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+