தமிழகத்தில் ஏப்ரல் 17ல் மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்கிறது.. கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு- சாகு
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளில் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இந்த முறை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல கட்சிகள் பாடுபட்டு வருகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் ஓயும். அந்த வகையில் வரும் 17ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓயும்.
ஆனால் இந்த முறை கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் ஓய்கிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் நாளை மாலையுடன் பூத் சிலிப் வழங்கும் பணிகள் முடிவடையும்.
நாளையே தபால் வாக்கு அளிக்க கடைசி நாளாகும். அது போல் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications