மூட்டை மூட்டையாக பணம்.. வேலூரில் தேர்தல் ரத்து?.. தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
Recommended Video

சென்னை: மூட்டை, மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்தாகுமா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ பதில் அளித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் எம்பி தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.
அப்போது அவர்களது வீட்டிலிருந்து ரூ 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

புகார்
அந்த பணக் கட்டுகளில் தொகுதி எண், வார்டு எண், தெரு பெயர் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நடவடிக்கை
அந்த புகாரில் அவர் கூறுகையில் வேட்புமனுவில் குறிப்பிட்டதை விட வருமான வரி சோதனையில் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

ரத்து
இந்த நிலையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வினாடி வினா போட்டி
100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையமும், ‘கோல் குயிஷ்' நிறுவனமும் இணைந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வினாடி-வினா போட்டி நடத்தியது.

இந்திய தேர்தல் ஆணையம்
அங்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் அங்கு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வருமான வரித்துறையும் தகவல் கொடுத்து இருக்கிறது. அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம்.

முடிவு எடுக்கும்
அதன்பிறகு, அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து தகவல்களையும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி கொண்டுதான் இருக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications