தினசரி 100 பேருக்கு சாப்பாடு.. 200 குடும்பங்களுக்கு காய்கறி.. கடவுள் சார் நீங்க!
சென்னை: கொரோனாவால் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவிகளைக் குவித்தவண்ணம் உள்ளனர் நல்லுள்ளம் படைத்தோர். அவர்களில் ஒரு அமைப்பு குறித்துத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
இந்த தகவலை நமக்கு அனுப்பி வைத்திருப்பவர் ராஜேஷ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அனுப்பியுள்ள தகவல்:

எனது பெயர் ராஜேஷ், Save Farmers Welfare Trust நிர்வாகி. ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு எங்களால் இயன்ற உதவியாக உணவு உணவுப்பொருட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செய்து வருகிறோம்.

தினமும் 100 பேருக்கு சாப்பாடு, 200 குடும்பங்களுக்கு காய்கறி, 30 குடும்பங்களுக்கு அரிசி, 10 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பு மூலம் மேற்கண்ட உதவிகளை செய்து வருகிறோம்.

களத்தில் நின்று பல்வேறு உதவிகளை செய்து வரும் மகராஜ புரம் ஊராட்சி துணைத்தலைவர் பழனிக்குமார் அவர்களுக்கும், பொருள் உதவி செய்து வரும் மணிமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜேஷ்

நல்ல பணி.. தொடரட்டும்.

சூப்பர் குடிமக்கள்:
சென்னையைச் சேர்ந்த நமது வாசகர் கே.வி. ரவிச்சந்திரன் அவர்கள் நமக்கு அனுப்பியுள்ள மடல் இது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாங்கள் சென்னை கிண்டி என்ஜீனியரிங் கல்லூரியில் 1976ம் ஆண்டு படித்து பட்டம் பெற்றவர்கள். ஒரு குழுவாக செயல்படும் சீனியர் சிட்டிசன்கள். எங்களது குரூப்புக்கு காஸ் என்று செல்லப் பெயர். அதாவது 76 கிளாஸ் என்பதன் சுருக்கம்தான் அது. தி.நகர் சிருங்கேரி மடத்தில் ஏழை எளிய மக்களுக்கு தினசரி சமையல் செய்து சாப்பாடு கொடுப்பதாக கேள்விப்பட்டோம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இங்கு தினசரி சாப்பாடு தருகிறார்கள்.

இதையடுத்து எங்களது நண்பர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நாமும் ஏதாவது செய்யலாம் என்று பேசி ரூ. 50,000 வரை வசூலித்தோம். அந்தப் பணத்தை வங்கிக் கணக்கின் மூலமாக, சிருங்கேரி மடத்திற்கு நன்கொடையாக அளித்து அவர்களது அன்னதானத் திட்டத்திற்கு உதவி செய்தோம். இந்த லாக்டவுன் சமயத்தில் எங்களது சீனியர் சிட்டிசன் குழுவால் ஆன சின்னதொரு உதவி என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
இது சிறிய உதவி அல்ல சார்.. மிகப் பெரிய உதவி.. மிகப் பெரிய புண்ணிய காரியம்.. உங்களால் நிரம்பும் வயிறுகள் உங்களை நிச்சயம் வாழ்த்தும்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications