உயிருக்கு போராடும் ஐந்தே வயதான ஜஸ்வந்த்! ப்ளீஸ் நீங்கள் நினைத்தால் உதவலாம்!
சென்னை: ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் ஜஸ்வந்த் இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார். ஐந்து வயதே ஆன ஜஸ்வந்த்திற்கு நீங்கள் நினைத்தால் இரண்டாவது வாய்ப்பை தர முடியும். ஜஸ்வந்த் உயிரைக் காப்பாற்ற, உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் ப்ளீஸ்!
ஐந்து வயதே ஆன ஜஸ்வந்த், சுட்டித்தனமாக ஓடியாடி விளையாடியிருக்க வேண்டிய குழந்தை.. ஆனால், எதிர்பார்க்காத வகையில் இப்போது கடுமையான இதய குறைபாடு காரணமாக உயிருக்கே போராடி வருகிறார்.

பிறந்தது முதலே ஜஸ்வந்த்திற்கு வாழ்க்கை போராட்டமாகவே இருந்துள்ளது. ப்ளே ஸ்கூலுக்கு சென்றிருக்க வேண்டிய ஜஸ்வந்த், இத்தனை காலம் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கே பெற்றோருடன் வந்து சென்று இருக்கிறார். பிறக்கும் போதே இதய பிரச்சினை இருந்ததால் அவரது வாழ்க்கையே போராட்டமாகப் போய்விட்டது.
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏட்ரியல் செப்டல் குறைபாடு மற்றும் மிட்ரல் வால்வு பிரச்சினையைச் சரி செய்ய ஜஸ்வந்த்திற்கு மிக முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷனுக்கு பிறகு ஜஸ்வந்த் உடல்நிலை சரியாகும்.. மற்ற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாடுவார் என்றே அவரது பெற்றோர் நினைத்தனர்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. துரதிர்ஷ்டவசமாக, ஜஸ்வந்தின் இதய பிரச்சினை தொடர்கிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மிட்ரல் வால்வைச் சரிசெய்ய உடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜஸ்வந்த நலமுடன் இருக்கவும் அவரது உயிரையே காப்பாற்றவும் இந்த செயல்முறை அவசியமானது என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.

ஐசியு சிகிச்சை, மருத்துவமனை செலவுகள், மருந்துகள் என இந்த ஆப்ரேஷன் செய்ய மொத்தம் ரூ.3,50,000 செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேட்டதும் ஜஸ்வந்தின் குடும்பத்தினருக்குப் பேரதிர்ச்சியாகப் போய்விட்டது. ஏனென்றால் தினசரி கூலி தொழிலாளியாக வேலை செய்து வரும் அவரது தந்தைக்கு இந்த தொகையை நினைத்துக் கூட பார்க்க முடியாத பெரிய தொகை.
இவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், ஜஸ்வந்தின் பெற்றோர் நம்பிக்கையைக் கைவிடவில்லை.. தங்கள் மகனுக்கு ஆரோக்கியமான மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த ஏழை பெற்றோரின் கனவை நிறைவேற்ற.. உயிருக்குப் போராடும் ஜஸ்வத்திற்கு நீங்கள் நினைத்தால் உதவலாம்.. நீங்கள் நன்கொடையாக அளிக்கும் தொகை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட அது ஜஸ்வத்தின் உயிரை காப்பாற்ற உதவும். ஜஸ்வந்திற்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க.. அவருக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தைத் தர உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் ப்ளீஸ்..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications