Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐ வங்கியில் டக்னு முளைத்த மர ஏணி.. ஸ்டேட் பாங்க் இந்தியா படிக்கட்டு எங்கே? ஆடிப்போன SBI பேங்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதாக கூறி ஒடிசாவில் வங்கிக்கு செல்லும் படிக்கட்டுகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளியிருக்கிறார்கள்.. இதனால் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முதல் மாடியில் செயல்படும் வங்கிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில், இதுதொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

வங்கிகளின் பாதுகாப்பு என்பது சில சமயம் கேள்விக்குறியாகிவிடுகிறது.. அதிலும் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காகவே வங்கி லாக்கர்களில் தங்க நகைகளை பலரும் வைத்து பாதுகாக்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, நகைகளுக்கு அந்தந்த வங்கிகள்தான் பாதுகாப்பு தரவேண்டும்.

SBI Bank Wooden Ladder State bank of India

வங்கிகளின் பாதுகாப்பு

கடந்த 2005ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. வங்கிகளின் அலட்சியம் காரணமாக கொள்ளை நடந்தால், வங்கிகளும் இந்த அலட்சியத்திற்கு பொறுப்பாகும். அதாவது, பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது ஊழியர்களின் அலட்சியம் போன்ற காரணங்களால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வங்கி பொறுப்பாகும் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

பொதுவாக, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வங்கிகள் உங்கள் தங்கம், வைரங்கள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களுக்கு எந்த காப்பீட்டையும் வழங்குவதில்லை. உங்கள் லாக்கரில் என்ன இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது,. அவர்களுக்கு தெரிந்துகொள்ள உரிமை இல்லை.

வங்கிப் பெட்டகத்தில் நகைகள்

இயற்கை பேரழிவுகள், தீ, பூகம்பங்கள் அல்லது வங்கியின் தவறு அல்லாத திருட்டுகளுக்கு வங்கிகள் பொறுப்பு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

எவ்வளவுதான் பாதுகாப்பு அம்சங்களுடன் வங்கிகள் செயல்பட்டாலும் , சிலநேரங்களில் அதிர்ச்சிகரமான கொள்ளை சம்பவங்களும் நடந்துவிடுகின்றன..

எனவேதான், பயிற்சி பெற்ற பாதுகாப்பு காவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனி நுழைவு வாசல், நுழைவுப் பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, அலாரம் அமைப்பு, தனித்த நுழைவு டிடெக்டர் போன்றவற்றை பலப்படுத்தி தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இப்படிப்பட்ட சூழலில் ஒடிசாவில் உள்ள வங்கியில் நடந்த சம்பவம், இந்தியாவையே அதிர வைத்து வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஒடிசாவில் பாத்ரக் நகரில் சரம்பா சந்தை முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை வரை அண்மையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன... இந்த பணியின்போது, அநத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கிக் கிளையின் முன்பகுதியில் இருந்த மாடிப் படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டன.

நகராட்சி ஊழியர்கள் படிக்கட்டுகள்

நகராட்சி ஊழியர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளை இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.. இதனால் முதல் மாடியில் உள்ள வங்கிக் கிளைக்கு செல்ல வழியில்லாமல் போய்விட்டது.. வங்கி பணிக்காக வழக்கம்போல் ஊழியர்கள் வந்தபோது, படிக்கட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு சிறிது நேரத்தில் ஏணி ஒன்று கொண்டுவந்து வைக்கப்பட்டது.

இந்த மர ஏணியை பார்த்து, ஊழியர்கள் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த மர ஏணியில் ஏறித்தான், ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வங்கிக்குள் சென்று வருகிறார்கள்.. இந்த மர ஏணியை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுவிடவும் அதை பார்த்து இணையவாசிகள் அதிர்ந்தனர்..

மர ஏணி வசதியா போச்சே

"அடடா, ஏணியா? இது கொள்ளையர்களை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் கொண்ட வங்கி போல் தெரிகிறதே" என்று பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்..

கஸ்டமர்கள் ஏணியில் ஏறும்போது கீழே விழுந்தால், அவர்களுக்கு இலவச காப்பீடு வசதி செய்யப்படவேண்டும் என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்..

ஆனால், படிக்கட்டுகளை இடிப்பதற்கு முன்பு, உள்ளாட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கும் வங்கி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் கொடுத்திருந்தது.. ஆனாலும், படிக்கட்டை சரி செய்ய எந்த வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லையாம்..

அதுமடுமல்ல, உள்ளாட்சி ஊழியர்கள் ஸ்பீக்கர் மூலம் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும்படியும் அறிவித்திருக்கிறார்கள்.. இதற்காக 2 நாட்கள் அவகாசமும் தரப்பட்டுள்ளது.. இதையடுத்தே படிக்கட்டுகளை இடித்ததாக ஊழியர்கள் சொல்கிறார்கள்..

எஸ்பிஐ SBI லோகோ

முதல் மாடியில் இருக்கும் வங்கிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்ட பிறகுதான், டிராக்டர் ஒன்றை கொண்டு வந்து வங்கி அருகில் நிறுத்தி, அதன் மீது ஒரு மர ஏணியை வைத்துள்ளனர்.. வங்கி செயல்படும் கட்டிட உரிமையாளர்தான், இந்த மர ஏணியை கொண்டு வந்து வைத்ததாக கூறுகிறார்கள்.

வங்கியின் முகப்பில் இருபுறமும் SBI லோகோ காணப்படும் நிலையில், டிராக்டர், மர ஏணி, அதில் வாடிக்கையில் ஏறிச்செல்வது என பேங்க்கின் வீடியோ காட்சி, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோ காட்சி விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில்,
அந்த மர ஏணியை அகற்றிவிட்டு, ஸ்டீல் படிக்கட்டை இப்போது வைத்து சமாளித்துள்ளாராம் பில்டிங் ஓனர்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+