Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐ சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! பிப்ரவரி முதல் SBI வங்கி விதியில் மெகா மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் வங்கி சேவைகளில் பிப்ரவரி 2026 முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் பிஎன்பி ஆகிய 4 வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளன. இந்த மாற்றங்கள் அன்றாட பணப் பரிமாற்றங்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடுகளை பாதிக்கக்கூடும் என்பதால், இதை வங்கி வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வது அவசியம்.

எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி (SBI)யை பொறுத்தவரை, தன்னுடைய பணப்பரிமாற்ற கட்டணங்களில் அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. குறிப்பாக ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணப்பரிமாற்ற முறையில், சிறிய அளவிலான தொகையை அனுப்புபவர்களுக்கு இது ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது...

SBI Salary Account

எஸ்பிஐ வங்கி

இனி ரூ. 25,000 வரை நீங்கள் யாருக்காவது பணம் அனுப்பினால் அதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அதற்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பினால் ரூ. 2 கட்டணமும், 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பினால் அதிகபட்சமாக ரூ. 10 வரை கட்டணமும் வசூலிக்கப்படும்.

வங்கிக்கு நேரடியாக சென்று பணம் அனுப்புபவர்களுக்கு பழைய முறையே தொடரும். ஏடிஎம் பயன்பாடு மற்றும் குறைந்தபட்ச இருப்பு விதிகளை வங்கி மாற்றவில்லை என்பது பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது..

அதேபோல ஐசிஐசிஐ ICICI வங்கியை பொறுத்தவரை, தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எஸ்பிஐ அக்கவுண்ட் சம்பளம்

இதுவரை சில உயர்ரக கார்டுகளில் வழங்கப்பட்டு வந்த இலவச சினிமா டிக்கெட் போன்ற சலுகைகள் நிறுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் டிஜிட்டல் வாலட்களில் பணம் ஏற்றுவதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒருவேளை கிரெடிட் கார்டு பில்லை ஆன்லைனில் செலுத்தாமல், நேராக வங்கிக்கு சென்று ரொக்கமாகக் கட்டினால் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது பெஸ்ட் ஆப்ஷன்..!

கிரெடிட் கார்டு

அதேபோல எச்டிஎப்சி (HDFC) வங்கியை எடுத்து கொண்டால், தன்னுடைய மதிப்புமிக்க "இன்பினியா" கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரிவார்டு பாயிண்டுகளை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதாவது நீங்கள் சேர்த்துள்ள ரிவார்டு புள்ளிகளை ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. மற்றபடி சாதாரண சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

புதிய கட்டணங்கள் விரைவில்?

PNB எனப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமே புதிய கட்டணங்கள் எதையும் விதிக்கவில்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் தங்களது அடையாள ஆவணங்களை புதுப்பிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் பிப்ரவரி மாத தொடக்கத்திற்குள் இதை செய்யாதவர்களின் வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் அபாயமும் உள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் வங்கி சேவைகளை முறைப்படுத்தவும், வாடிக்கையாளர்களை இன்னும் பாதுகாப்பான டிஜிட்டல் முறைக்கு மாற்றவும் கொண்டுவரப்பட்டுள்ளன... எனவே பணத்தை மிச்சப்படுத்த வேண்டுமானால், மேற்கண்ட இந்த புதிய கட்டண முறைகளை அறிந்துகொண்டு பரிவர்த்தனைகளை திட்டமிட்டாலே போதும்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+