நாளை மாலை வரைதான் டைம்.. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுங்கள்.. உச்ச நீதிமன்றம் எஸ்பிஐக்கு உத்தரவு
சென்னை: மார்ச் 12 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை வரைதான் டைம்.. அதற்குள் பத்திரங்களை வெளியிடுங்கள் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூன் வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐயின் மனு நிராகரிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாங்கிய மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை எஸ்பிஐ வெளியிட வேண்டும். மார்ச் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் பொது விவரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

முன்னதாக தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு மார்ச் 6ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இதை ஜூன் 30, 2024 வரை நீட்டிக்க எஸ்பிஐ கோரிக்கை வைத்தது .
அவகாசம் கோரிக்கை; தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்க கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதில் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது, அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. எல்லாம் ஒரே இடத்தில் தானே இருக்கிறது. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்பிஐ வங்கிக்கு கொடுத்தோம் அதனை பின்பற்றுவதற்கு கால அவகாசம் கோருவது ஏன்? தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
அதை எளிதாக எடுக்க முடியுமே. அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது.. எங்களுக்கு புரியவில்லை.. உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை
எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். சரியாக அவகாசம் முடியும் 2 நாட்களுக்கு முன் வீம்பிற்கு புதிய மனு தாக்கல் செய்தது ஏன் ?, என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உத்தரவு: மார்ச் 12 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை வரைதான் டைம்.. அதற்குள் பத்திரங்களை வெளியிடுங்கள் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications