என்ன சொல்றீங்க.. அப்படியா? ரொம்ப அருமையான வாதம்.. எடப்பாடி டீமின் வாதத்தை கேட்டு.. கலாய்த்த நீதிபதி
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று வைக்கப்பட்ட சில வாதங்களை கேட்டு.. அருமையான வாதம் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கிண்டல் செய்தனர்.
கன்னித்தீவு கதை முடிய போகிறது என்று சொன்னால் நம்புவீர்களா.. அந்த கதை முடிகிறதோ இல்லையோ.. அதிமுக மோதல் முடிய போகிறது. குறைந்தபட்சம் சட்ட போராட்டமாவது இன்றோடு முடிவிற்கு வர போகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு கிளைமேக்ஸை எட்டிவிட்டது. இன்றோடு வழக்கில் விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழு வழக்கில் இன்றோடு அனைத்து தரப்பு வாதங்களும் முடியும். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வாதம் முடிந்த நிலையில் இன்று அதிமுக தரப்பு வாதம் வைக்கப்பட உள்ளது. அதேபோல் அவைத்தலைவர் சார்பாகவும் வாதம் வைக்கப்படுகிறது. இதற்கடுத்து வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.

பொதுக்குழு வழக்கு
இன்று பொதுக்குழு வழக்கில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று வழக்கில் ஆஜர். அவர் தனது வாதத்தில், ஓ பன்னீர்ச்செல்வத்திற்கு எதிராக சிவில் வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டாம். அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படவில்லை. அதாவது தொண்டர்கள் மூலமாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக போட்டியின்றி தேர்வானார்.

அதிமுக
அதிமுகவில் எப்போதும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. சசிகலாவை நீக்கும் போதும் பொதுக்குழு மூலமே நீக்கினோம். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.இரட்டை தலைமையால் கட்சி முடங்கி உள்ளது. அவை தலைவருக்கு செயற்குழு, பொதுக்குழுவை நடத்த அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எதிராக முடிவு எடுக்க பொதுக்குழுவை கூட்டும் போதும், அந்த பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவைத்தலைவர் என்பது அலங்கார பதவி கிடையாது.

ஓபிஎஸ்
கட்சியின் பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் போலீசுக்கு சென்றார். பாதுகாப்பு குறைபாடு என்று கூறி அவர் போலீசுக்கு சென்றார் அவருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்றால் அவர் பொதுக்குழுவில் வந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதன் மூலமே ஓ பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பது தெளிவாகிறது. தொண்டர்கள் ஆதரவு அவருக்கு இருப்பதாக கூறுகிறார். ஆனால் இதை அவரால் உறுதி செய்ய முடியுமா? நிரூபிக்க முடியுமா?

நீக்கம்
கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை பற்றி இங்கு யாரும் பேசவில்லை. அவர் நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடுக்கப்படவில்லை. இருப்பினும் அவர் பொதுக்குழுவிற்கு வரவில்லை. பொதுக்குழுவிற்கு எதிராக போலீசிடம் சென்றார். பொதுக்குழுவில் அடிப்படை விதி, பொதுக்குழுவை மதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த அடிப்படை விதியையே அவர் மீறிவிட்டார். அதனால் அவரை கட்சியில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் நீக்கினார்கள். இது விதிப்படிதான் செய்யப்பட்டு உள்ளது.

யாரும் சொல்லவில்லை
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியதே பொதுக்குழுதான் . அந்த அதிகாரம் பொதுக்குழுவிற்கு இருக்கிறது. அதே பொதுக்குழுதான் இந்த பதவிகளை ரத்து செய்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்வு செய்யப்பட்டது தேர்தல் மூலம் இல்லை. இந்த தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தவிர யாரும் போட்டியிடவில்லை. எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகிவிட்டதால், ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டியதாகிவிட்டது என்று வாதம் வைக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள் என்னது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகிவிட்டதால், ஓ பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டியதாகிவிட்டதா.. அருமையான வாதம் போங்க என்று கிண்டல் செய்வது போல பேசினர்.












Click it and Unblock the Notifications