மாதம் ரூ.1000 உதவித்தொகை + கணினி + தட்டச்சு பயிற்சி.. போட்டி தேர்வுக்கு இலவசமாக ரெடியாகலாம் - அரசு
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஓராண்டு காலத்துக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும்போட்டித்தேர்வு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோருக்கான சேர்க்கை என்பது நடைபெற உள்ளது.
மத்திய அரசும், மாநில அரசும் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இடஒதுக்கீடு, உதவித்தொகை, மானியம் உள்பட ஏராளமான திட்டங்கள் இதில் அடங்கும்.

அந்த வகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் வேலைவாய்ப்புக்கான பொது இயக்குனரகம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஓராண்டு கால உதவித்தொகையுடன் இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோருக்கான சேர்க்கை என்பது நடைபெற உள்ளது. அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது சென்னை கிண்டி ஆலந்தூர் ரோட்டில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட்டு வருகிறது. படித்த வேலையில்லாத எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு இம்மையம் மூலம் ஓராண்டு கால உதவித்தொகையுடன் கூடிய சிறப்பு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு ஆகியவற்றின் பயிற்சி என்பது ஜுலை 1 ம் தேதி முதல் தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சியில் சேர ஆர்வமுள்ள பிளஸ்2, தேர்ச்சி அல்லது பட்டய படிப்பை முடித்த மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த மையத்தில் வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சிக்கான வயது வரம்பு என்பது 18-27 ஆக நிர்யம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை மற்றும் இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தக்கம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கு ஜுன் 20ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடி இனத்தவர்களக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம், திருவிகா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, சென்னை என்ற அலுவலகத்தை அணுகலாம். இல்லாவிட்டால் 044 - 24615112 என்ற எண்ணை அலுவலக பணி நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ஜிகே ஸ்ரீராக் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications