“குட் நியூஸ்”.. நாங்குநேரி ஜாதி கொடூரம்! சாட்டையை சுழற்றும் தமிழக அரசு - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: பள்ளிகளில் மாணவா்கள் மத்தியில் ஏற்படக் கூடிய சாதி பிரச்சனைகளை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஈமெயில், கடிதம் மூலமாக கருத்துகளைத் தெரிவிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்து உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தலித் மாணவனை, அவரது வீடு புகுந்த சக மாணவர்களே சாதி வெறியால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பள்ளிகள் சாதி, இன வேறுபாடுகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஆணையம் அமைத்தது.

இதுகுறித்து அப்போது அரசு வெளியிட்ட அறிக்கையில், "ஆணையம் காவல் துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அரசுக்கு 6 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கட்டிடத்தில் இந்த ஆணையம் செயல்படும். ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க ஏதுவான குறைதீர் அமைப்பை உருவாக்க, தக்க வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.
இதற்காக கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினர், சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறுவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில், "பள்ளி, கல்லூரி மாணவா்கள் இடையே ஜாதி, இன பிரச்சனைகள் இல்லாத சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக இக்குழு கல்வியாளா்கள், மாணவா்கள், சமூக சிந்தனையாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளை பெற்று அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு 6 மாதங்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கல்வி நிறுவனங்கள் சாா்பிலான கருத்துகள், ஆலோசனைகளை குழுவின் மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கலாம் என்று அதன் தலைவா் சந்துரு தெரிவித்துள்ளாா். இதனை அடுத்து ஜாதி வன்முறைகளை தடுப்பது குறித்த கருத்துகள், ஆலோசனைகளை தலைமை ஆசிரியா்கள் ஒரு நபா் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் 'எண் 147, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை - 4' என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம். இந்த தகவலை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் தெரிவித்து தொடா் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்." என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications