Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு.. காப்பி அடித்தால் என்ன தண்டனை தெரியுமா? பள்ளி கல்விதுறை சொன்ன மேஜர் விஷயம்!

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் என்ன தண்டனை வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு என்னென்ன தண்டனை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வுத்தாள் ரத்து செய்யப்படுவது முதலாக, முறைகேடுகளின் தன்மைக்கேற்ப பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேர்வில் தோல்வி அடைந்தால் கூட, அடுத்த சில மாதங்களில் நடைபெறும் சிறப்புத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்டால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் என்பதால் யாரும் எந்த தவறையும் செய்ய வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு

தமிழ்நாடு முழுவதும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 13) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் இருந்தும், தனித்தேர்வர்களாகவும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ - மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இந்த பொதுத்தேர்வானது ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோல், ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் நாளை பொதுத்தேர்வு தொடங்குகிறது.

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு

10-ம் வகுப்புக்கும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு இருந்தாலும் கூட, ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில், பள்ளிப்படிப்பை முடித்து உயர்நிலைக் கல்விக்கு அடியெடுத்து வைப்பதற்கு இந்த தேர்வுதான் வழிகோலுகிறது. அந்த உயர்நிலைக் கல்வியின் அடிப்படையில் எனவே, கிட்டத்தட்ட ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.

எதுவெல்லாம் முறைகேடு?

எதுவெல்லாம் முறைகேடு?

இந்நிலையில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் எதையெல்லாம் செய்யலாம்.. எதுவெல்லாம் செய்யக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித் துறை பட்டியலிட்டுள்ளது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் செய்தாலும் அது முறைகேடாகவே கருதப்படும். அதன்படி, பிறரை பார்த்து எழுதுதல், விடைக்குறிப்புகள் அடங்கிய துண்டுத்தாள்களை (பிட்டு) வைத்திருத்தல், விடைக்குறிப்பை பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளுதல், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல், விடைத்தாள்களை தேர்வு அறைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்டவை முறைகேடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 என்ன தண்டனை?

என்ன தண்டனை?

இதனிடையே, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், என்னென்ன முறைகேடுகள் எப்படிப்பட்ட தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காப்பி அடித்தால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத தடைவிதிக்கப்படும். தேர்வறையில் துண்டுத்தாள்களை தன்வசம் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவர். மேலும், அந்த மாணவர் எழுதிய அனைத்து பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படும். இது தவிர, ஓராண்டு பொதுத்தேர்வு எழுத தடைவிதிக்கப்படும். விடைக்குறிப்பை பார்த்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும். மேலும், ஓராண்டுக்கு தேர்வு எழுத தடையும் விதிக்கப்படும். ஆள்மாறாட்ட செயலில் ஈடுபட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடைவிதிக்கப்படும். விடைத்தாள்களை பரிமாறினால் தேர்வு ரத்து செய்யப்படும். குறிப்பிட்ட பருவத்தேர்வுகளுக்கும் அனுமதி கிடையாது. தேர்வுத்தாளில் மதிப்பெண் வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தாலும் தேர்வு ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+