Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அது" தான் விஷயமா.. துடிதுடித்த டீச்சர்.. உயிரே போயிடுச்சே.. அரசு பள்ளி ஆசிரியை கைது.. மாங்காட்டில்

ஒப்பந்த ஆசிரியை தற்கொலை வழக்கில், அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாங்காடு, அரசு பள்ளி ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்த வழக்கில், அவரை குறித்து கேவலமாகவும், இழிவாகவும் பேசிய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சவுபாக்கியம்.. 40 வயதாகிறது.. இதே பள்ளியில் பியூலா என்பவர் ஒப்பந்த ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்..

 கிளாஸ்ரூம்

கிளாஸ்ரூம்

பியூலாவுக்கு 35 வயதாகிறது.. இவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம் தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார்... மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில், தலைமை ஆசிரியரின் அனுமதியோடு கிளாசுக்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்து வந்தார்... கடந்த சில நாட்களாகவே, பியூலா - சவுபாக்கியம் இவர்கள் 2 பேருக்கும் வார்த்தை மோதல்கள் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் ஒருநாள், சவுபாக்கியம், பியூலாவை அசிங்கமான வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது..

 பியூலா பியூலா

பியூலா பியூலா

இதனால் மனம் நொந்துபோன பியூலா, இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி நேற்று முன்தினம் மாங்காடு போலீஸில் புகார் தந்தார். பிறகு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் தந்தார்.. ஆனால், 2 தரப்பிலுமே நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது... இந்நிலையில், நேற்று வழக்கம்போல் ஸ்கூலுக்கு வந்தார் பியூலா.. போலீஸ் வரை புகாரை கொண்டுபோனதால், ஆத்திரமடைந்த டீச்சர் சவுபாக்கியம், மறுபடியும் தரக்குறைவான வார்த்தைகளால் பியூலாவை திட்டியதாக கூறப்படுகிறது... இதனால் மனம் உடைந்த பியூலா, வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 அடிக்க பாய்ந்தனர்

அடிக்க பாய்ந்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாங்காடு போலீசார், பியூலாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பியூலா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் ரூமில் இருந்த சவுபாக்கியத்தை தாக்க முயன்றனர்.. ஆனால், அதற்குள் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துவிட்டனர்.. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சவுபாக்கியம் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்... ஆனால், பியூலாவின் உறவினர்கள் ஸ்டேஷனுக்கே வந்துவிட்டனர்..

 மோசம் மோசம்

மோசம் மோசம்

பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சவுபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்து போராட்டம் செய்தனர்.. புகாரும் தந்னர்.. இந்த புகாரிரன் பேரில் சவுபாக்கியத்திடம் மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்... அப்போதுதான், விஷயமே வெளிப்பட்டது.. பியூலாவை என்ன காரணத்தினாலே சவுபாக்கியத்துக்கு பிடிக்காமல் போயுள்ளது.. அதனால், அவரை பற்றி சோஷியல் மீடியாவில் மோசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டிருக்கிறார்.. அவதூறான வார்த்தைகளில் பியூலாவை பேசியதும் உறுதியானதையடுத்து, பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி சவுபாக்கியத்தை மாங்காடு போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

விசாரணை

இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "பட்டதாரிப் பெண் பியூலா. தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பியூலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்தோம்... விசாரணையில் பியூலாவுக்கும், ஆசிரியை சௌபாக்கியத்துக்கும் இடையே நடந்த சண்டை குறித்த தகவல்கள் தெரியவந்தன. இதற்கிடையில் ஆசிரியை செளபாக்கியம், பியூலாவின் பெயரை குறிப்பிடாமல். சில விமர்சனங்களை தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். அது தொடர்பாக சௌபாக்கியத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது... விசாரணைக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியை செளபாக்கியம் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

 தகாத வார்த்தை

தகாத வார்த்தை

ஆனால், உண்மையிலேயே இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை? பியூலாவை ஏன் சவுபாக்கியம் வெறுத்தார்? எதற்காக வாக்குவாதங்களை செய்தார் என்றெல்லாம் உறுதியாக தெரியவில்லை.. வாக்குவாதம் வந்ததாலேயே, பியூலா பற்றி தகாத வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சௌபாக்கியம் வைத்திருந்தாரா? அதுவும் தெரியவில்லை.. தன்னை தகாத வார்த்தையால் பேசிய சௌபாக்கியம்மீது நடவடிக்கை கேட்டு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும், மாங்காடு போலீசிலும் பியூலா புகார் தந்தும், அதுகுறித்து ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? அதுவும் தெரியவில்லை.. ஒப்பந்த ஆசிரியரின் இந்த தற்கொலை சம்பவம் மாங்காட்டில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+