ஸ்கூல் பக்கமே வராதீங்க.. ஆசிரியர்களை மிரட்டிய ஹெச்.எம். சிநேகலதா சஸ்பெண்ட்
பொள்ளாச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: "எதுக்கு எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க.. போராட்டத்துக்கு வரலேன்னா, வீட்டில இருக்க வேண்டியதுதானே" என்று பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு பெரும்பாலான அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், 3 நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மத்தியில் பேசுகிறார்.

எதுக்காக வந்தீங்க?
அதில், அவர் கேட்கும் முதல் கேள்வியே, எதுக்காக ஸ்கூலுக்கு எல்லாரும் வந்தீங்க? என்றுதான். தொடர்ந்து அவர் பேசும்போது, "போராட்டத்துக்கு வரவேண்டியதுதானே? அப்படி வரமுடியலைன்னா வீட்டுக்கு போக வேண்டியதுதானே? எதுக்காக ஸ்கூல் வந்தீங்க?

சம்பளப் பிடித்தம்
இன்னைக்கு உங்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்கும்னு நினைக்கலாம். ஆனால், நாளைக்கே உங்களுக்கு எல்லா பலன்களும் கேன்சல் பண்ணிடவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலைக்கு வரலைன்னா சம்பளம் மட்டும்தான் பிடிக்கப்படும்.

கண்டனம், ஆதரவு
நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால், யார் உங்களுக்கு உதவ போறாங்க?'' என்று பெண் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ பேச்சிற்கு கண்டனங்களும் ஆதரவும் மாறி மாறி எழுந்தன.

பள்ளிக்கல்வித்துறை
போராட்டத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்களை மிரட்டும் பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூடவே எழுந்தது. இந்த வீடியோ விவகாரம் பள்ளிக்கல்வித் துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

சஸ்பெண்ட்
பிறகு இது சம்பந்தமான நடத்தப்பட்ட விசாரணையில் பொள்ளாச்சி அருகே ரமணமுதலி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிநேகலதாதான் ஆசிரியர்களை மிரட்டியது என்பது தெரியவந்ததையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications