School holiday: விட்டாச்சு ஸ்கூலுக்கு லீவு.. விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், சில மாவட்டங்கள் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இன்று ( 24.11.25 - திங்கட்கிழமை) தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாத நிலையில் கடைசி இரண்டு வாரங்களில் பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்து இருக்கிறது.
வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதோடு வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை வீரர்கள் அங்கு நவீன உபகரணங்களுடன் முகாமிட்டுள்ளனர். அங்கெல்லாம் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இது ஒரு புறம் இருக்க இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் திங்கட்கிழமையான இன்று தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications