பிள்ளைங்களா இதுங்க... பத்தி கொண்டுதான் வருது.. பஸ்ஸில் தொங்கி கொண்டு சாகசம்!
ஆபத்தான பஸ் பயணத்தில் பள்ளி மாணவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: இதெல்லாம் பிள்ளைங்களா.. இந்த வீடியோவை பார்த்தாலே பற்றிக் கொண்டு வருகிறது. கெத்து என்ற பெயரில் பஸ்களில் இந்த பிள்ளைகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை!
இது எந்த இடம் என்று தெரியவில்லை. அநேகமாக சென்னையாகத்தான் இருக்கும். பஸ் வேகமாக நடுரோட்டில் போய் கொண்டிருக்கிறது.
அப்போது பள்ளி மாணவர்கள் சிலர் ஓடிவந்து ஏறுகிறார்கள். எல்லாருமே 8, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் போல இருக்கிறார்கள். ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருக்கிறார்கள்.

சாகசம்
பஸ் படிக்கட்டில் தொங்குவது போய், ஜன்னல் கம்பிகளை பிடித்து ஏறுகிறார்கள். கம்பியை பிடித்து நிற்பார்கள் என்று பார்த்தால், அப்படியே தலைகீழாக தொங்குகிறார்கள். ஒருத்தன் மட்டும் கிடையாது, இப்படியே 2, 3பேர் விளையாடி கொண்டு வருகிறார்கள்.

பதறிய மக்கள்
பஸ்-சின் டாப்பில் ஏற்கனவே ஒரு டீம் ஏறி உட்கார்ந்திருக்கிறது. நடுரோட்டில் இந்த பிள்ளைகள் இப்படி செய்வதை பார்த்து ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், பஸ்சுக்குள் இருந்த பயணிகள் எல்லாருமே பதறி போனார்கள். கம்பிகளில் சர்க்கஸ் காட்டும்போது இவர்களுக்கு பக்கத்திலேயே நிறைய வண்டிகள் ஒட்டி போய் கொண்டிருக்கிறது.

விளையாட்டு
பஸ் டயர்ல கால் வெச்சிக்கிட்டு ஏறி கெத்து காட்டுவதை, அதை கூட இருக்கும் அவரது அல்லக்கைகள் சிரித்தமேனிக்கு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பிள்ளைகள் பஸ்சுக்கு வெளியே உயிரோடு விளையாடி வருவதை பஸ்ஸின் கண்டக்டர் தட்டிக் கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் கேட்கவில்லை.

வயித்தெரிச்சல்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படி சர்க்கஸ் காட்டிட்டு தொங்கிட்டு போறத பெத்தவங்க பார்த்தா எவ்வளவு வயித்தெரிச்சல் படுவாங்கன்னு கூட இந்த பசங்களுக்கு தெரியாம போகிறதேன்னுதான் கவலையா இருக்கு!!
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications