கதறவிடும் கொரோனா.. சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள், கல்லூரிகள்.. சென்னை கமிஷனர் அதிரடி
பள்ளி கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றும் பணி துவங்கியது
சென்னை: சமீபகாலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது தொற்று அதிகமாகி வருவதால், இறப்பு எண்ணிக்கையும் பெருகி வருகிறது.. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 7,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்... இதையடுத்து தமிழக அரசு பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "சென்னையில் படுக்கை பற்றாக்குறையை குறைக்க லயோலா கல்லூரியிலும், ஈச்சம்பாக்கம் மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கவுள்ளோம். இதுவரை தடுப்பூசியின் முதல் தவணை கூட செலுத்தாதவர்களின் பட்டியலை தயார் செய்து வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

நர்ஸ்கள்
அதன்படியே அதற்கான வேலைகளும் தொடங்கி உள்ளன.. டான் பாஸ்கோ அறக்கட்டளை டாக்டர்கள், ஆலோசகர்கள், நர்ஸ்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க எக்மோர் பள்ளி வளாகத்தில் உருவாக்கப்பட உள்ளது.

நம்பிக்கை
இதுகுறித்து கார்ப்பரேஷன் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி சொல்லும்போது, "டான் பாஸ்கோ பள்ளியில் 104 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறக்கிறோம். டான் பாஸ்கோ அறக்கட்டளை எங்களுக்கு 8 டாக்டர்கள், மூன்று ஆலோசகர்கள் மற்றும் 24 நர்ஸ்கள் கொண்ட குழுவை வழங்கியுள்ளது... படுக்கைகள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளன.. ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடும்.

ஆக்சிஜன்
வரும் புதன்கிழமைக்குள் இந்த பணியை ஆரம்பித்து, அதை ஒரு மருத்துவக் கல்லூரியுடன் அவற்றின் விரிவாக்க வசதியாக இணைப்போம்.. டான் பாஸ்கோவில் உள்ள விரிவாக்க மையம் போல, நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் க்கும் மேற்பட்ட இடங்களிலும் உருவாக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து இதற்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன.

சிகிச்சை மையம்
சென்னையில் படுக்கை பற்றாக்குறையை குறைக்க, லயோலா கல்லூரியிலும், ஈச்சம்பாக்கம், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியிலும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதால் சென்னை மக்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும் என்று தெரிகிறது.. அதுமட்டுமல்ல, எங்கெல்லாம் தொற்று பாதிப்பு குறித்த பிரச்சனைகள் கவனத்திற்கு வருகிறதோ ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது கூடுதல் நம்பிக்கையை சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications