கன மழை காரணமாக ஹை அலர்ட்.. இந்த 17 மாவட்டங்களில் 2 நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 10ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் நவம்பர் 11 வரை, அதாவது, 2 நாட்கள் விடுமுறை தொடரும்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் முழுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள், அதாவது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நவ 10 ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது மாலை வரையிலான நிலவரம். ஆனால் பிறகு இரவு வரை வெவ்வேறு மாவட்ட நிர்வாகங்களும் விடுமுறையை அறிவித்தன. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட மாவட்டங்கள் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள்
திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் நவ 10 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில்தான் அதிகம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தவிர, திண்டுக்கல் மாவட்டத்தில் நவ 10 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ 10 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ 10 விடுமுறை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நவ 10 லீவு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 10ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.

விடாமல் மழை பெய்யும்
கடலூர் முதல் சென்னை வரை நவ, 10 மற்றும் 11 என இரண்டு நாட்களிலும் விடாமல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களில் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை
இவ்வாறு மழை பெய்யும் போது வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளில் மாற்றப்படுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகள்
இன்று இரவு வரை நிலவரத்தை பார்த்து மேலும் பல மாவட்டங்களிலும், மாவட்ட நிர்வாகங்கள், பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிப்பை வெளியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications