கனமழை காரணமாக இன்றும் ஸ்கூல் லீவ்! திருப்பத்தூர், திருவண்ணாமலை பள்ளிகளுக்கு விடுமுறை! சென்னையில்?
சென்னை: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். இதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
தலைநகர் சென்னையில் கடந்த 2 நாட்களாகவே இதமான சூழல் நிலவுவதுடன், லேசான மழையும் பெய்து வந்தது. அவ்வப்போது பெய்யும் மழையும், இதமான காற்றும் நகரை குழுமையாக வைத்திருந்தது. நேற்று முன்தினம் இரவு சென்னையின் அனேக இடங்களில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.

பின்னர் நிதானமாகப் பெய்ய ஆரம்பித்த மழை, நள்ளிரவு தாண்டி, இடி, மின்னலுடன் தொடர்ந்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கியது.கோயம்பேடு, பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், பெரியமேடு, வேப்பேரி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், திருமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதேபோல, நேற்றும் மழை நீடித்தது. அவ்வப்போது விட்டு விட்டு நேற்று மாலை வரை மழை பெய்தது. இதனால் நகரின் சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக அவதிப்பட்டனர்.
மழை காரணமாக 28 இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, மரங்கள் வெட்டி அகற்றும் பணிகளும் முழுவீச்சில் நடந்தன. மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக இப்பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இன்றைய நிலவரப்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், ஒருசில தென் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (ஜூன் 20) பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். சென்னையில் நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications