தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், 2019 - 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால், ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகள் நாளை திறப்பு

பள்ளிகள் நாளை திறப்பு

பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, கோடை வெப்பம் அதிகம் இருப்பதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதன்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. ஒரு சில மழலையர் பள்ளிகள் மட்டும் திறப்பு தேதியை ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றி வைத்து இருக்கின்றனர். பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீருடைகள்

புதிய சீருடைகள்

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு, மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒன்று முதல் 8 ஆம் வரை வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

கடைவீதிகள் களைகட்டின.

கடைவீதிகள் களைகட்டின.

அதேபோல், லேப்-டாப் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. அது நிறைவடைந்ததும், அந்த உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது. நாளை பள்ளி திறக்கப்பட உள்ளததல், தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் கடைகளுக்கு சென்று தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், நேற்று கடைவீதிகள் களைகட்டின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+