இந்தியாவை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்! அதென்ன "வெட் - பல்ப்' பாதிப்பு? விஞ்ஞானிகள் புது வார்னிங்
சென்னை: காலநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது 'ஈர-குமிழ்' (Wet Bulb) எனும் இன்னொரு மோசமான பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கணித்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், நிலக்கரி என பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், தென்/வட துருவங்களில் பனிப்பாறைகள் உருகுவதாகவும் செய்திகள் வெளிவந்ததை அடிக்கடி நாம் பார்த்திருப்போம்.

இதனால் கடலோர பகுதிகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த மனித குலத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது அதிக வெப்பம் இருந்தால் கூட மரத்தின் நிழலிலோ, ஏசி ரூமுக்குள் சென்றோ தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகமானால் நிச்சயம் அது மனிதர்களை கொன்றுவிடும். இதற்கு பெயர்தான் ஈர-குமிழ் (Wet Bulb) பாதிப்பு.
நம் உடலில் வெப்பம் அதிகமானால் அதை சரி செய்ய வியர்வை வெளியேறுகிறது. இது இயற்கையாக நமது உடலை குளிர செய்கிறது. ஆனால் இதற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பது அவசியமாகும். அதிகமான ஈரப்பதம் இருந்தால் உடலிலிருந்து வியர்வை வெளியேறாது. அதாவது வெப்பம் குறையாது. எனவே நீங்கள் எவ்வளவுதான் ஃபிட்டான ஆளாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் இறந்துவிடுவீர்கள்.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தின் வெப்ப அழுத்தம் துறையின் சர்வதேச நிபுணர் மேத்யூ ஹூபர் கூறுகையில், "மனிதர்களின் உடலில் இயல்பாக 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும். ஆனால் ஏதாவது கடினமான வேலை செய்யும் போது இது அதிகரிக்கும். அப்போது நமது வியர்வை சுரபிகள்தான் வெப்பத்தை வெளியேற்றுகின்றன. சுமார் 80 சதவிகிதமான வெப்பம் இப்படித்தான் வெளியேறுகிறது.
ஆனால் இதே காற்றில் ஈரப்பதம் அதிகமானால் வெப்பம் வெளியேறுவதில் சிக்கல் இருக்கும். இது இதயத்திற்கு நல்லதல்ல. காற்றின் ஈரப்பதம் 100 சதவிகிதத்தை தொடும்போது மனிதன் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியுள்ளார்.
தற்போது மாறிவரும் காலநிலை, காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் அளவை அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால் காற்றில் ஈரப்பதம் 100 சதவிகிதம் இருந்தாலும் அது மனிதர்களை கொல்ல 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். தற்போது வரை ஈர-குமிழ் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை மட்டுமே நீடித்திருக்கிறது. இதுதான் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி. ஆனாலும் இந்த நிலைமை விரைவில் மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடுவது மிகவும் எளிது. ஒரு துணியை எடுத்து அதை நீரில் முக்கி வெளியே எடுத்து அதற்குள் தெர்மாமீட்டரை வைத்து சுற்ற வேண்டும். இப்போது இந்த துணியில் இருக்கும் ஈரம் ஆவியாக தொடங்கும். அப்போது தெர்மாமீட்டரின் அளவு மாறுபடும். அதை வைத்து காற்றின் ஈரப்பதம் எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் அடுத்த ஒரு வார காலத்திற்கு துபாயில் காற்றின் ஈரப்பதம் அளவு 86 டிகிரி பாரன்ஹீட்டாக (35-45%) இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதில் சோகம் என்னவெனில் தற்போது அரபு நாடுகளில் வெப்பமும், காற்றில் உள்ள ஈரப்பதமும் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், மாறிவரும் காலநிலை காரணமாக மழை காடுகள் இருக்கும் வெப்பமண்டல நாடுகளில்தான் காற்றின் ஈரப்பதம் விரைவில் உயரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பாரத்தால் இந்தியா, சீனா, இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகளில்தான் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
நமது உலகத்தின் வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமானால் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் ஒரு டிகிரி அதிகரிக்கும். இப்போது இருக்கும் நிலைமையே தொடர்ந்து நீடித்தால் 2100வது ஆண்டில் பூமியின் வெப்பநிலை 2.1 செல்ஷியஸ் அதிகரிக்கும். என காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் 4.9 டிகிரி பாரன்ஹீட் உயரும். இது 95 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்தால் மனிதர்களுக்கு இறப்பு நிச்சயம் ஏற்பட்டுவிடும். தண்ணீர் குடித்தாலும் சரி, குளத்தில் முங்கினாலும் சரி, ஏசி ரூமில் இருந்தாலும் சரி டெத் கன்ஃபார்ம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய சூழில் ஒரு சில இடங்களில் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே இந்த ஈர-குமிழ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதே 2060ம் ஆண்டில் இந்த பாதிப்பு 6 மணி நேரம் வரை நீடிக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications