“டபுள் கேம்” ஆடும் அரசு..சென்னையில் அதானி துறைமுகம்! 35 பேருக்கு பாதிப்பா? நெல்லை முபாரக் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுற்றுசூழலை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "சென்னை நகருக்கு அருகில் உள்ள அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எச்சரிக்கை விடப்பட்ட இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

SDPI Nellai Mubarak condemn Tamilnadu govt on Adani Kattupalli port

முந்தைய அதிமுக ஆட்சியில், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் காரணமாக மிகப்பெரும் அளவில் விரிவுப்படுத்தப்படும் அதானி துறைமுகத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, தற்போதைய ஆளும் கட்சியும் அப்போதைய எதிர்கட்சியுமான திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளால் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தது.

இந்த நிலையில், 2021 ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்த திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது அதன் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங்களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை, அதானி குழுமம் வாங்கி தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தற்போது, அந்த துறைமுகத்தை 10 மடங்கு விரிவாக்கம் செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அதானி குழுமம். இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அதானி நிறுவனம் வெளிட்டுள்ள சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ஆராய்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இத்திட்டத்தின் காரணமாக சூழலுக்கு பாதிப்புகளே அதிகமாக அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்காக கடலினுள் 796.15 ஹெக்டேர் (2000 ஏக்கர் அளவு) அளவு ஆக்கிரமிப்பு செய்வதால் துறைமுகத்தைச் சுற்றியுள்ள, பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி வரை கடல் நீர் புகுந்துவிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஆறு, ஏரி, நீரூற்று, குட்டைகள் ஆகியவையும் பாதிப்படையும்.

இதனால், அந்த பகுதி மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பிற்குள்ளாகும். சென்னைக்கான குடிநீர் ஆதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். அத்துடன், சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து, பழங்குடி மீனவர்களின் வாழ்விடத்தை அழித்து, 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும்.

ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு துணைபோகும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+