தமிழ்நாட்டில் ஒரு பக்கம் டாஸ்மாக்.. மறுபக்கம் போதை மாபியா.. ஆக்சன் கோரும் எஸ்டிபிஐ
சென்னை: தமிழ்நாட்டை குறிவைத்து செயல்படும் போதைப் பொருள் மாஃபியா கும்பல் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர், மாணவர்களை குறிவைத்து பரவிவரும் இத்தகைய போதைக் கலாச்சாரம் கவலையை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள், மாணவர்கள் பலர் அடிமையாகியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து பல்வேறு வழிகளில் இத்தகைய போதை கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது.

சமீப காலமாக தமிழகத்தை மையப்படுத்தி போதைப் பொருட்கள் குறித்த செய்திகளும், போதை பொருட்கள் கடத்தும் கும்பல் தொடர்பான செய்திகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சட்டவிரோத செயலில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சம் பாராமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கஞ்சா மட்டுமின்றி மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான போதைப் பொருட்கள் குஜராத்திலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் தனியார் துறைமுகமான முந்தராவிலிருந்து தான் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட போதைப் பொருட்கள் நாடு முழுவதும் கடத்தப்படுகின்றன. பெரும்பாலான போதைக் கும்பல் தமிழகத்தை மையப்படுத்தி நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது. தமிழகம் ஒருபுறம் டாஸ்மாக் மூலம் மதுவுக்கு அடிமையாகி வரும் நிலையில் மறுபுறம் சப்தமில்லாமல் போதை வஸ்துகளுக்கும் அடிமையாகி வருகின்றது. தமிழக இளைஞர்களை குறிவைத்து நடைபெற்றுவரும் இத்தகைய நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
போதைக்கு அடிமையான இளைஞர்களை பல்வேறு குற்றச் செயல்களை எவ்வித அச்சமுமின்றி துணிச்சலோடு செய்யத்தூண்டி வருகின்றது. அதுதொடர்பில் குற்றங்களும் தமிழகத்தில் நடந்துள்ளன. இத்தகையவர்களை சமூக விரோதிகள் தங்கள் செயல்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அச்சமும் நிலவுகிறது. தற்போது தமிழக அளவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை போதையின் காரணமாக சீரழித்துக் கொண்டுள்ளனர். ஆகவே, போதை பொருட்களை விற்பனை செய்யும் மாஃபியா கும்பல்கள், விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனியாக சிறப்பு பிரிவை அமைத்து போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழக இளைஞர்களை காக்க வேண்டும். இளைஞர்களை போதையிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் கைகளிலும் உள்ளது. நாட்டினுள் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. போதைப் பொருள் விநியோகம் மற்றும் அவற்றை ஒழிப்பது தொடர்பான மூலங்களை ஆராய்வதில் சிவில் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து இளைஞர்கள், சிறுவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி போதைப் பொருள் பழக்கத்திற்குள் அவர்கள் சிக்காது பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications