நெல்லை சையது தமீம்.. தருமபுரியில் முகமது ஆசிப் கொலை! உ.பி., பீகாராய் மாறும் தமிழ்நாடு! சொன்னது யார்?
சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்
கொலைக் குற்றங்களை தடுத்து நிறுத்துவதில் திமுக அரசு தொடர் தோல்வியை சந்தித்து வருவதாகவும்,
இது தமிழ்நாடா? கொலை நாடா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் நெல்லை மேலப்பாளையத்தில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்திவரும் சையது தமீம் என்பவரை அவரின் கடைக்குள் வைத்தே மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மக்கள் அடர்த்தி நிறைந்த, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு, சையது தமீம் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பையும், குடும்பத்தினரின் நிலையை கருத்தில்கொண்டு ரூ.50 லட்சம் இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குள்ளாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுரியில் உணவக ஊழியர் முகமது ஆசிப் உணவத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூக மக்களின் பாதுகாவலன் என இந்த அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து அவர்கள் கொலைச் செய்யப்படுவதன் மூலம் இந்த அரசு பாராமுகமாகவே இருக்கிறது என்பது தெரிகிறது. சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாக இந்த அரசு இருக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் ஜனவரி மாதம் தொடங்கி 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் வழ.ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் கொலைகளும் இதில் அடங்கும். ஒவ்வொரு கொலைக் குற்றமும் நடந்த பிறகு விரைவாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக தெரிவித்தாலும், குற்றம் நடப்பதற்கு முன்னரே குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதில் காவல்துறை தோல்வி அடைந்திருப்பதையே நடக்கும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
உ.பி., பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைப் போல தமிழகத்தில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் கூலிப்படையினர் அதிகரித்துள்ளது கவலை அளிக்கின்றது. ஒருபுறம் போதைக் கும்பலால் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் மறுபுறம் கூலிப்படையினரால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேப்போல் ஆணவக் கொலைகளும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்துவதில் திமுக அரசும், காவல்துறையும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.
ஆகவே, அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும், காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், தமிழக அரசும், காவல்துறையும் சட்டம்-ஒழுங்கை காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கொலைக்களமாக மாறிவரும் தமிழ்நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications