நடிகர் விஜய்க்கு சமூக பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளது! பணிகள் சிறக்கட்டும்! எஸ்.டி.பி.ஐ. வாழ்த்து!
சென்னை: நடிகர் விஜய்க்கு சமூக பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அவரது பணிகள் இன்னும் சிறக்கட்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்வி ஊக்கமளிப்பு நிகழ்வுகளை நடிகர் விஜய் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக நெல்லை முபாரக் தனது சமூக வலைதளப் பக்கங்களில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

''நடிகர் விஜய் அவர்களின் கல்வி ஊக்கமளிப்பு முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு பிரபல்யம் என்ற அளவில் மற்றவர்களைவிட, ஒரு நடிகராக அவர் செய்யும் செயல்கள், தெரிவிக்கும் கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் தனி கவனம் பெறுகிறது.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் செய்து வரும் நற்பணிகளுக்கு மத்தியில்,நடிகர் சூர்யா போன்று விஜய் அவர்களும் கல்வி தொடர்பான சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அவரே சொன்னதுபோல அவருக்கு சமூக பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற கல்வி ஊக்கமளிப்பு நிகழ்வுகளை அவர் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக போற்றப்படும் தேசிய கல்வி தின நாளில் இதுபோன்ற நிகழ்வுகளை அவர் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் அவரின் பணிகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு நெல்லை முபாரக் தனது பதிவில் கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications