அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்!
சென்னை: நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ நாராயணன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக வேலை பார்த்து வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு மொத்தம் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம், பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில், நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏவான நாராயணன் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ நாராயணன், நாங்குநேரியில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த சூழலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் கடுமையாக அப்செட் ஆனார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ரெட்டியார்பட்டி நாராயணன் 1986-ல் அதிமுகவில் இணைந்து தொடர்ந்து அந்தக் கட்சியிலேயே இருந்து வந்தவர். ஜெயலலிதா முதல்வரான 1991-ல் இருந்து 1996 வரை கிளைச் செயலாளர், 1996-ல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர், 2004-ல் நாடாளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக்குழு உறுப்பினர், 2009 நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உறுப்பினர், அதன்பிறகு 2009-ல் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் மற்றும் 2011-ல் புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2013-ல் இருந்து எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். நாராயணனுன் மனைவி பவளச்செல்வி காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர். கடந்த 2019ல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் நாராயணன்.
-
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications