இதுவரை இல்லாத மாபெரும் உச்சம்.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 27126 பேர் பாதிப்பு.. கொரோனா தீவிரம்!
சென்னை: மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 27126 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 2ம் அலை கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 11,128,119 பேர் குணமாகி உள்ளனர் . நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 196 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,598,710 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 159,790 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,68,487 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,43,208 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12432 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,65,693 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,45,812 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12590 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,02,354 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,72,554 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 2211 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,93,366
பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,84,094 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7189 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திலேயே இதுதான் மகாராஷ்ராவில் பதிவான அதிக கேஸ் ஆகும். அங்கு மொத்தம் 24,49,147 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 22,03,553பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 53300 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications