அப்பாடா.. மீள்கிறது சென்னை.. குறைகிறது தொற்று.. ஆனாலும் அந்த ஒரு "ஏரியா"வில் மட்டும் தொடரும் கலக்கம்
சென்னையில் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது
சென்னை: சென்னையில் தொற்று குறைந்து வருகிறதாம்.. ராயபுரம் தவிர மற்ற பகுதிகளில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டதால், சென்னைவாசிகள் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.
எப்போது கொரோனா தாக்கம் அதிகம் வந்தாலும், தமிழகத்திலேயே சென்னையில்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்... சென்னையில் தொற்று குறைந்தாலே, பாதி தமிழகம் சேஃப் ஆகிவிடும்.
முதல்வர் ஸ்டாலின், பதவியேற்றது முதலே சென்னையில் தொற்று குறைய பெரிதும் நடவடிக்கை எடுத்து வந்தார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் துரிதமான வேகம், செயல்பாடு இதற்கு உறுதுணையாக இருந்தன.

மாநகாட்சி
லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு, சென்னையில் தொற்று குறைய துவங்கியுள்ளது.. கடந்த ஒரு வாரத்தில் சென்னை ராயபுரம் பகுதியை தவிர அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சியே அறிவித்துள்ளது... ஒவ்வொரு வார முடிவிலும் தரவுகளை ஒப்பீடு செய்து ரிப்போர்ட் கிடைக்கும்.. அந்த தரவுகளின் அடிப்படையில் 13 மண்டலங்களில் தொற்று குறைந்துள்ளதை உறுதி செய்துள்ளது மாநகராட்சி.

சென்னை
ராயபுரத்தில் கொரோனா தொற்று வீதம் 0.7% ஆக உயர்ந்துள்ள நிலையில், அதன் அருகே இருக்கும் திரு.வி.க. நகரில் தொற்று அதிகரிப்பு விகிதம் 0% ஆக பதிவாகியுள்ளது... சென்னையின் சராசரி தொற்று விகிதம் தற்போது -5.5% ஆக உள்ளது. 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் சென்னையின் சராசரி தொற்று விகிதத்திற்கும் குறைவாகவே பாதிப்புகளை கொண்டுள்ளது.

கோடம்பாக்கம்
கடந்த வார ஆரம்பத்தில் 38,680 ஆக இருந்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 24,290 ஆக குறைந்துள்ளது... கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளாக கோடம்பாக்கம் முதலிடம் வகிக்கிறது... இங்கு 2320 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. அதேபோல, 2258 பேர்கள் அண்ணாநகரில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்... வளசரவாக்கத்தில் 2154 பேரும், அடையாரில் 2093 பேரும், தேனாம்பேட்டையில் 2076 பேரும் தொற்றுக்கு தீவிரமான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராயபுரம்
சென்னையிலேயே மிக குறைந்த அளவாக மணலியில் 452 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. திருவொற்றியூரில் 753 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்போதுமே ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது..

சவால்
ஆனால், ராயபுரம்தான் எப்போதுமே பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது... மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் ராயபுரத்தில் மட்டும் சுமார் 7.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் மட்டும் சுமார் 6.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்... எனவேதான் தொற்று மிக வேகமாக பரவத்தொடங்கியது. இப்போது ராயபுரத்தை கட்டுப்படுத்துவதுதான் அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்து வருகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications