"சீக்ரெட்".. விஜயகாந்த் வீட்டை சுற்றும் "பாஜக மேலிட" ரகசியம்.. லிஸ்ட்லயே இல்லயே.. "அவர்" வர போறாராம்

விஜயகாந்த் தன் மகனுக்கு மோடி தலைமையில் திருமணம் செய்ய ஆசைப்படுகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் வீட்டின் விசேஷம் குறித்து ஒரு முக்கிய விஷயம் கசிந்து கொண்டிருக்கிறது.. இதுதான் இன்றைய தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக உள்ளது.

எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகிறது.. அதேபோல, தமிழகத்திலும் மறைமுக பேச்சுவார்த்கைள், கூட்டணி தொடர்பான அறிகுறிகள் தென்பட துவங்கிவிட்டன.
ஆனால், தேமுதிக இந்த முறை யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற ஆர்வத்தைவிட, விஜயபிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற ஆர்வம்தான் அதிகமாக எழுந்துள்ளது.

விஜயகாந்த்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதுமே, விஜயபிரபாகரனை குடும்பத்தில் முன்னிறுத்த தொடங்கிவிட்டனர்..

 போஸ்டிங்

போஸ்டிங்

பிரேமலதாவும், எல்.கே.சுதீஷூம் கட்சிப்பணியில் இருந்தாலும், இவர்கள் 2 பேரையும்விட ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார் விஜயபிரபாகரன்.. கட்சி விழாக்களுக்கு செல்வது, நிர்வாகிகளின் இல்ல திருமணங்களில் பங்கேற்பது என பம்பரமாக சுற்றி வருகிறார்.. கட்சி தலைவராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டு, செயல்தலைவராக அல்லது பொருளாளராக விஜயபிரபாகரனுக்கு போஸ்டிங் கொடுக்க உள்ளதாக அவ்வப்போது செய்திகள் பரபரக்கும்.. ஆனால், வெளிவந்த வேகத்திலேயே அடங்கிவிடும்.

விஜயபிரகாரன்

விஜயபிரகாரன்

இப்போது விஷயம் என்னவென்றால், கட்சி விஷயத்தை விட்டுவிட்டு, விஜயபிரகாரனுக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி இணையத்தில் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டது.. 2019 டிசம்பரில் விஜயபிரபாகரனுக்கும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது... இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்துக் கொண்டனர்... அந்த போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகின..

 நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

ஆனால், நிச்சயம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.. பிறகு தொற்று பாதிப்பு குறைந்து, லாக்டவுன்கள் முழுமையாக நீக்கப்பட்டு, தமிழகமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியும், இந்த திருமணம் நடைபெறவில்லை.. பிறகுதான் திருமணம் தாமதமாவதற்கு வேறு ஒரு காரணம் கசிந்து வருகிறது..

 விஜயகாந்த் ஆசை

விஜயகாந்த் ஆசை

இந்த திருமணத்தை பிரதமர் மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் ஆசைப்படுகிறாராம்.. பிரதமரின் தேதிக்காக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. அநேகமாக இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது... அதற்கான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் செய்து வருகிறார்களாம். குடும்பத்தின் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த காரணம்தான் தற்போது கசிந்து கொண்டிருக்கிறது.

 கன்னத்தை பிடித்து கிள்ளி..

கன்னத்தை பிடித்து கிள்ளி..

விஜயகாந்த்தை பொறுத்தவரை தமிழகமே விரும்பக்கூடிய நல்ல இதயம் கொண்டவர்.. அரசியலையும் தாண்டி, அனைத்து கட்சி தலைவர்களாலும், ஒருவர் இப்படி விரும்பப்படுவது இந்த காலத்தில் அபூர்வம்.. அந்தவகையில் விஜயகாந்த் மீது, பாஜக மேலிடம் தனி பாசம் வைத்திருக்கிறது.. நிறைய மதிப்பும் வைத்திருக்கிறது.. அதிலும், பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் என்றால் தனிப்பட்ட முறையில் நிறைய ப்ரியம் உண்டு.. ஒருமுறை பிரதமர் மோடி, விஜயகாந்த்தின் கன்னத்தை தட்டி பாராட்டியதை தமிழகமே அன்று ஆச்சரியமாக பார்த்தது..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

அதேபோல பிரேமலதாவின் பிரச்சாரங்கள் அனைத்தும், பாஜக மேலிடத்தை ஈர்த்து விடும்.. அந்த வகையில், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், தேமுதிகவை பாஜக கைவிடாமல், தன்னுடனேயே அழைத்து செல்லும்.. கடந்த முறை பாஜகவுக்கே சீட் விஷயத்தில் நிறைய சிக்கல் என்பதால், தேமுதிகவை கையோடு அழைத்து கொள்ள முடியவில்லை.. ஆனால், பாஜக & தேமுதிக இடையேயான உறவு என்றுமே வலுவாகவே உள்ளது.. தேமுதிகவின் வாக்கு விகிதம் படிப்படியாக குறைந்து, இப்போது ஒரு சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்ட நிலையிலும்கூட, பாஜக இனியும் தேமுதிகவை கைவிடாது என்றே தெரிகிறது..

 ஈரமனசுக்காரர்

ஈரமனசுக்காரர்

இதற்கெல்லாம் காரணம் விஜயகாந்த் என்ற சொக்கத்தங்கம்தான்... தமிழக பாஜகவையே எடுத்துக் கொண்டாலும், பிரதமர் மோடி தலைமை தாங்கி இதுவரை எந்த கல்யாணத்தையும் நடத்தி வைத்தது கிடையாது.. கட்சி தலைவர்களுக்கே இப்படி என்றால், மாற்று கட்சி தலைவர் வீட்டு கல்யாணத்தை பிரதமர் நடத்தி வைக்க நேர்ந்தால், அது உண்மையிலேயே தமிழகத்துக்கே பெருமை மட்டுமல்ல, விஜயகாந்த்தின் ஈரமனசுக்கு கிடைத்த இன்னொரு மணிமகுடம்தான்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+