அமைச்சர்கள் அறையில் ‘ரீல்ஸ்’ எடுக்கும் தவெகவினர்.. வேலையை கெடுக்காமல் தடுக்க அறைக்கு 2 போலீசார்!
சென்னை: தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஒவ்வொரு துறை அமைச்சரின் அறைக்கும் 2 காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர்களை சந்திக்க வரும் தவெகவினர் ஏராளமானோர் அறைக்குள் சென்று ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தினந்தோறும் அமைச்சர்களைச் சந்திக்கத் தலைமைச் செயலகத்திற்குச் சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர்.

அமைச்சர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதோடு நின்றுவிடாமல், அமைச்சர்களின் அறைகளுக்குள்ளேயே மொபைல் போன்களுடன் கும்பல் கும்பலாக நுழைந்து, சினிமா பாடல்களைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு 'ரீல்ஸ்' செய்வது, வீடியோக்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த கோப்புகளைப் பரிசீலிக்கும்போதும், அரசு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடும்போதும், இந்த திடீர் 'ரீல்ஸ்' கூட்டத்தால் பணிகளுக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கட்சியின் தொண்டர்கள் அமைச்சர்களின் அறைகளை ஆக்கிரமித்துக் கொள்வதால், பொதுமக்கள் அமைச்சர்களைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
தலைமைச் செயலகத்தின் அமைச்சர்கள் அறை என்பது மிக முக்கிய அரசாங்க முடிவுகள் எடுக்கப்படும் இடம். அங்கு அனுமதியின்றி வீடியோக்கள் எடுக்கப்படுவது கோட்டையின் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தன்மைக்குக் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தலைமைச் செயலகப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஆலோசித்து இந்த அதிரடி பாதுகாப்புப் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளனர்.
இனி ஒவ்வொரு அமைச்சரின் அறையின் நுழைவாயிலிலும் இரண்டு துப்பாக்கி ஏந்திய அல்லது சிறப்புப் பிரிவு காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். அமைச்சரின் நேர்முக உதவியாளர் அனுமதி வழங்கும் நபர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அமைச்சர்களைச் சந்திக்கச் செல்வோர் மொபைல் போன்களில் வீடியோ எடுப்பது, தேவையற்ற முறையில் புகைப்படம் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வரலாற்றில் 'ரீல்ஸ்' மோகத்திற்காக அமைச்சர்கள் அறைக்குக் காவல் போடப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் செய்தி தற்போது அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
-
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்












Click it and Unblock the Notifications