"கலைஞர்".. துரைமுருகன் கிட்ட ஜெயலலிதா சொன்ன அந்த "சீக்ரெட்".. போட்டுடைத்த வைரமுத்து.. திகைத்த திமுக

துரைமுருகன், ஜெயலலிதா குறித்து சுவாரஸ்யமாக பேசினார் வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைரமுத்து, ஜெயலலிதா பற்றியும், துரைமுருகன் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

காளப்பட்டியில் உள்ள சுகுணா கலையரங்கில் வைரமுத்துவின் 70ஆம் பிறந்தநாள் கொண்டாட்டமும், சினிமா துறையில் 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக "வைரமுத்து இலக்கியம் 50" என்ற பெயரில் இலக்கிய பெருவிழாவும் நடைபெற்றது.

இதில் மூத்த தலைவர்கள் பா.சிதம்பரம் எம்பி., அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தேவா

தேவா

இதில் தேவா பேசும்போது, "'கவிப்பேரரசு வைரமுத்து மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது என்னுடைய பாக்கியம். ஒவ்வொரு தமிழர் விழாவுக்கும் வைரமுத்து எழுதி நான் இசைத்த பாடல்கள் தான் அதிகம் ஒலிக்கப்படுகிறது... மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர் வைரமுத்து... எந்தவொரு தலைக்கணமும் இல்லாத அவர், என்னுடைய பேரனுக்கும் பாடல் எழுத வேண்டும் என்று நெஞ்சார புகழ்ந்து கூறினார்.

 கலைஞர்

கலைஞர்

பிறகு, துரைமுருகன் பேசியபோது, "வைரமுத்து கலைஞரிடம் பெரும் மதிப்பு பெற்றவர்.. இந்த உலகில் கற்பனை இல்லாத மனிதனே இருக்க மாட்டான்.. கவிதையில் எந்த அளவிற்கு வைரமுத்துவிற்கு ஜாலம் உள்ளதோ அதை விட உரைநடை வீச்சு அவரிடம் உள்ளது. இன்று வாழும் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் அனைத்தும் நீங்கள் தான்" என்று புகழாரம் சூட்டினார்.. வைரமுத்துவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள நெருக்கத்தை விலாவரியாக மேடையில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எடுத்துரைத்தார் துரைமுருகன்.

 சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

இதற்கு பிறகு வைரமுத்து பேசும்போது, "இந்த தமிழ் மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.. இன்னொரு மொழிக்கு இடம் தந்துவிடக் கூடாது. தமிழ் மொழி தான் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் இணைக்கும். தமிழ் மொழி பொலிவுடன் இருக்கும் வரை உங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கும்.. தமிழை வளர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது.. மொழி என்பது கருவி அல்ல... பண்பாடு, மதித்தல்.

 சுவாரஸ்ய பேச்சு

சுவாரஸ்ய பேச்சு

அரசுப் பள்ளிகளிலும் சரி, தனியார் பள்ளிகளிலும் சரி, மிகப்பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அது மாணவர்களை தமிழ்ப் படிக்கச் சொன்னால் படிக்கத் தெரிவதில்லை, எழுத சொன்னால் தமிழ் எழுதத் தெரிவதில்லை. 50 ஆண்டுகள் இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ் நாட்டிலேயே தமிழ் வெறும் பேச்சு மொழியாகிவிடும் விபத்து நடைபெறும்" என்று எச்சரித்திருத்தார். தொடர்ந்து துரைமுருகன் பற்றி சுவாரஸ்யமாக வைரமுத்து பேசியதாவது:

 பேராசிரியர்

பேராசிரியர்

"ஒரு உண்மையை உங்களுக்கு சொல்ல போகிறேன்.. தமிழ்நாட்டின் நீர்வளத்தை தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் ஒரு அமைச்சர் என்றால், அது நீங்கள்தான்.. அதுவும் 40 ஆண்டுகளாக, பொதுப்பணித் துறையையும், நீர்வளத்துறையையும் உள்ளங்கையில் வைத்திருக்கிறீர்.. அமைச்சராக நீங்கள் பதவி வகிப்பது எல்லாம் எனக்கு பெரிய விஷயம் இல்லை.. ஆனால், திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகிப்பதுதான், உங்கள் வாழவின் உச்சம் என்று நினைக்கிறேன்.. அண்ணா வகித்த பதவி அது.. நாவலர் வகித்த பதவி.. பேராசிரியர் உட்கார்ந்த நாற்காலி அது.. 4வதாக மூத்த முன்னணி தலைவர் துரைமுருகன்தான்..

 எம்ஜிஆர் - கலைஞர்

எம்ஜிஆர் - கலைஞர்

இளைய தலைமுறைக்கு இந்த விஷயம் தெரியுமா?ன்னு தெரியல.. துரைமுருகனை எம்ஜிஆர்தான் படிக்க வைத்தார்.. அவருக்கு சட்டை வாங்கி தந்தது, பேனா வாங்கி தந்தது, படிக்க நூல் வாங்க தந்தது, கல்லூரியில் கட்டணம் கட்டியது, எல்லாமே எம்ஜிஆர்தான்.. 72-ல் கட்சி பிரிகிறது.. எம்ஜிஆர் தலைவராகிறார்.. கலைஞரும் தலைவராகிறார்.. அப்போது எம்ஜிஆ அழைக்கிறார்.. "துரைமுருகா, உனக்கு என்ன பதவி, பொறுப்பு வேண்டும்? என்று எழுதி கொடுத்துவிடு.. அப்படியே என்னுடனும் வந்துவிடு" என்கிறார்..

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

இப்படி கேட்டதற்கு, நீங்களும் நானுமாக இருந்தால் கொஞ்சம் நிலைதடுமாறியிருப்போம்.. ஆனால், துரைமுருகன், "அண்ணா, நீங்கள் எனக்கு கடவுள்.. கலைஞர்தான் எனக்கு தலைவர்..உங்களை மதிக்கிறேன், நேசிக்கிறேன், துதிக்கிறேன்.. ஆனால், இருப்பது என்று வந்துவிட்டால், கலைஞரோடுதான் இருப்பேன்" என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார்..

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஒருநாள் சட்டசபை நிறைவடைய போகிறது.. சபை கலைந்தும் கலையாமல் உள்ளது.. முதலமைச்சர் இன்னும் விடைபெறவில்லை.. அவருக்கு முன்னால், ஒரு எம்எல்ஏ உட்கார்ந்திருக்கிறார்.. முதலமைச்சர் அந்த எம்எல்ஏவை பார்த்து, "நீங்க சகலகலா வல்லவராச்சே.. நல்லா பேசுவீங்க.. நல்லா நடிப்பீங்க.. நீங்க மட்டும் சினிமாவுக்கு வந்திருந்தால், சிவாஜி கணேசனை ஜெயித்து இருப்பீர்கள்" என்கிறார் அந்த முதல்வர்.. அதற்கு இந்த சட்டமன்ற உறுப்பினர், "ஆமாம், ஜெயித்தாலும் ஜெயித்திருப்பேன்.. ஏன், உங்களோடும் நடித்திருப்பேனே" என்கிறார்.. அந்த சட்டமன்ற உறுப்பினர் பெயர் துரைமுருகன்.. அந்த முதல்வர் பெயர் ஜெயலலிதா" என்றார் வைரமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+