இந்த மூன்று ’ஆப்கள்’ உங்க செல்போனில் இருந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க.. மத்திய அரசு கொடுத்த அலர்ட்
சென்னை: ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள அதே வேளையில், கொஞ்சம் அசந்தாலும் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சைபர் கிரைம் கும்பல்கள் சுருட்டி விடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க டெக் உலகில் பிரபலமாக உள்ள மூன்று ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை பட்டியலிட்டுள்ள அரசு, அதை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே தற்போது ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு நினைத்து பார்க்க முடியாத அளவு பெருகிவிட்டது. மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் ஸ்மார்ட் போனையும் சேர்க்கலாம் என சொல்லும் அளவிற்கு அதன் தேவை தற்போது உள்ளது.

சைபர் கிரைம் மோசடி
ஒவ்வொருவரின் கைகளிலும் ஆறாம் விரலை போல ஸ்மார்ட்போன்கள் அலங்கரித்து வருகின்றன. வெறும் தொலைபேசி அழைப்புகள் முதல் ஷாப்பிங், மேப்ஸ், பண பரிமாற்றம் என பெரும்பாலான சேவைகளை ஸ்மார்ட் போனிலேயே முடித்துவிடும் வசதி வந்துவிட்டது.
ஸ்மார்ட் போன்கள் வருகையில் மக்களின் பல்வேறு வேலைகளும் எளிதாகிவிட்ட அதே நேரத்தில் இதை பயன்படுத்தி புதுப்புது மோசடிகளும் அரங்கேறுகின்றன. கொஞ்சம் அசந்தாலும் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டி விடுகிறார்கள் சைபர் கிரைம் மோசடி கும்பல்கள்.
ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகள்
எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது, அறிவுறுத்தல்களை மத்திய அரசின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் 14 சி அமைப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போனில் சில செயலிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெக் உலகில் பிரபலமாக உள்ள மூன்று ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை பட்டியலிட்டுள்ள அரசு, அதை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மூன்று செயலிகள் என்னென்ன?
* AnyDesk,
* TeamViewer,
* QuickSupport-
மேற்கண்ட மூன்று செயலிகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த மூன்று செயலிகளும் டெக் உலகில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு செல்போனை இயக்குவதற்கான வசதியை கொடுத்தாலும், இவற்றை சைபர் கிரைம் கும்பல்கள் தவறாக பயன்படுத்தி நிதி இழப்பை ஏற்படுத்துவதால் இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications