மோசமாக இருந்த சாலை.. உடனே ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த துறை சார்ந்த அமைச்சர் ஏ.வ. வேலு உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் சாலை பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதிகாலையில் பேசிய ஸ்டாலின்
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் .வ. வேலு கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் சாலை பணிகள் நடைபெறுவது முறையாக இல்லை. தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இதனை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாலை 6 மணிக்கு என்னை போனில் தொடர்பு கொண்டார் .

ஒப்பந்தம் ரத்து
''இந்த சாலை பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுங்கள்'' என்று முதல்வர் என்னிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் அந்த சாலை அமைக்கும் பணியை எடுத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தரமுள்ள சாலைகள் அமைக்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன .
இது தொடர்பான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன .

சுங்கச்சாவடிகள் மூடப்படும்
ஒரே கோட்டத்தில், ஒரே ஒப்பந்ததாரர் மொத்தமாகச் சாலைப் பணியை எடுக்கும் பேக்கேஜ் முறை முதல் ரத்து செய்யப்படுகிறது . இவ்வாறு ஏ.வ. வேலு பேசினார். இதேபோல் சென்னை நகர்ப்புற பகுதியிலுள்ள நெமிலி, வானகரம், பரனூர், சமுத்திரம், சூரப்பட்டு ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளைக் கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று ஏ.வ. வேலு கூறினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு
''தேர்தல் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல முடியாத கிராமப் பகுதிகளுக்கும், மூலை முடுக்குகளுக்கெல்லாம் நேரில் சென்று பிரசாரம் செய்து, இன்று மேசை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாகப் பெரும் உந்து சக்தியாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தி.மு.க ஆட்சி அமைவதற்கு ஸ்டாலினுக்கு துணையாக இருந்தது உதயநிதி ஸ்டாலின்'' என்றும் ஏ.வ. வேலு பேசியது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications