ஜனநாயகன் தான் முக்கியமா.. போராடும் ஆசிரியர்கள் பற்றி பேச முடியாதா.. ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தடையாகியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு சீமான், ஜனநாயகன் படத்திற்காக குரல் கொடுத்து, உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்கள் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாங்கள் நடித்த அடங்காதே படமும் முடக்கப்பட்டது. நீ மதத்தை காத்து மனிதனை கொல்ல நினைக்கிறாய்.. நான் மனிதனை காத்து மதத்தை கொல்ல நினைக்கிறேன் என்ற வசனம் பேசியிருந்தேன். அந்த வசனம் உள்பட 500 இடங்களில் வெட்டிவிட்டனர். எந்த அரசும் தனக்கு எதிரான கருத்துகளுக்கு குரல்வளையை நெரிக்கிறது.

ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்
குற்ற பத்திரிகை படம் எப்படி குதறி வெளியிட்டனர் என்பது தெரியும். இதனால் பலர் படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் நெருக்கடி கொடுக்குமளவுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஜனநாயகன் படத்திற்காக குரல் கொடுத்துள்ளார். திரையில் வரும் ஜனநாயகன் பற்றி கவலைப்படுகிறீர்கள். நான் தரையில் உள்ள ஜனநாயகன் பற்றி கவலைப்படுகிறேன்.
பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள. பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் கேட்டு வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அதைப்பற்றி எவனும் பேசுவதில்லை. போராடும் ஆசிரியர்களின் கை, கால்களை உடைக்கிறார்கள். அதை யாரும் பேசுவதில்லை. சம வேலை, சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் வீதியில் நிற்கிறார்கள். பணி நிரந்தரம் கேட்டு நிற்கிறார்கள். கொரோனா காலத்தில் உயிரை கொடுத்து பணியாற்றிய செவிலியர்களையும் வீதிக்கு வந்து போராட வைத்துள்ளனர்.
இதை நாங்க நம்பணுமா
அதைப்பற்றியும் யாரும் பேசுவதில்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ஜனநாயகன் உரிமை மறுக்கப்படுவது பற்றி பேசுகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டபோது, குறித்த நேரத்தை விட 5 நிமிடம் கூடுதலாக பேசியதற்காக என் மீதும், எங்கள் நிர்வாகிகள் மீதும் 7 வழக்குகள் போட்டுள்ளனர். கரூரில் 40க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தபோது ஏன் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போடவில்லை.
பள்ளி, கல்லூரியில் அரசியல் பேசக் கூடாது என்று கூறியவர்கள், அங்கு சினிமா பேசக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இல்லை. எங்கே கொண்டு போகிறீர்கள் நாட்டை. ஆபரேஷன் சிந்தூருக்கு ஊருக்கு முன்பு கொடியை பிடித்து சென்று, ஜனநாயகன் பட விவகாரத்தில் நீங்கள் பாஜகவை எதிர்க்கிறீர்கள் என்பதை நம்ப வேண்டுமா. இடி என்கிறபோது மோடி என்று ஓடியது யார்" என கேள்வி எழுப்பினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications