தம்பி விஜய்.. ஆகச் சிறந்த கலைஞன் ரஜினி! அப்படியே ரூட்டை மாற்றிய சீமான்! பின்னணியில் ‘அந்த’ கட்சியா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜயை தம்பி என அழைத்து வந்த நாம் தமிழர் சீமான் அவரை விமர்சித்து வருவதும் கடந்த காலங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்த சீமான் தற்போது ரஜினியை சந்தித்திருப்பதும் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியுடன் கைகோர்த்தால் விஜய் ரசிகர்களை சமாளிக்கலாம் என்பதால் தான் சீமான் ரஜினியை சந்தித்ததாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் மூலமாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசியலில் கால் பதித்திருக்கிறார் விஜய். அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு எழுந்த போது அவரை வரவேற்றவர்களில் முக்கியமானவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

விஜய் எனது தம்பி யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா என பல இடங்களில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு யார் கோபப்படுகிறார்களோ? இல்லையோ? சீமான் எப்போதும் கொந்தளித்தே காணப்படுகிறார்.
உச்சகட்டமாக லாரியில் அடிபட்டு செத்துப் போவாய் என பேசியது அந்த கட்சி தொண்டர்களையே ரசிக்க வைக்கவில்லை. காரணம் திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் பேசியதை சீமான் ரசிக்கவில்லை. மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலரும் விஜய் கட்சிக்கு தாவலாம் என்ற தகவல் சீமானை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதன் காரணமாகவே வாய்க்கு வாய் விஜயை விமர்சித்து வருகிறார் சீமான்.
அதே நேரத்தில் ஆரம்பத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் போது எதிர்ப்பு குரல் எழுப்பிய சீமான் அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதும் ஆகச் சிறந்த கலைஞன் என பாராட்டினார். தற்போது தம்பி விஜய்க்காக ஆகச்சிறந்த கலைஞனுடன் கைகோர்த்து இருக்கிறார் சீமான். காரணம் விஜய் கட்சி நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விமர்சித்து வரும் நிலையில் பலர் விஜய் ரசிகர்கள் என்பதால் நேருக்கு நேர் பதிலடி கொடுக்க முடியாத சூழல் இருக்கிறது.
மேலும் பலர் கொத்துக் கொத்தாக கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில் ரஜினியோடு கை கோர்த்தால் விஜய்க்கு எதிராக வலுவான விமர்சனங்களை வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் சீமான் ரஜினியை சந்தித்ததாக கூறுகின்றனர். மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு தேசிய கட்சி ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது வரும் காலங்களில். இன்னும் காலம் செல்ல செல்ல பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் என்கின்றனர் அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் பார்வையாளர்கள். அதே நேரத்தில் விஜயின் அரசியல் பார்வை தெளிவாக இருக்கிறது. தன்னைப் பற்றியும், தன் கட்சியைப் பற்றியும் மற்றவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும், தளபதி 69 படம் முடியும் வரை அமைதி அரசியல், அதற்குப் பின் அட்டாக் அரசியல் என தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறாராம். மேலும், பிறர் பேசுவதை விட்டுவிட்டு, கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வேலையை பாருங்கள் என மாநில நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாகவும் தகவல்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications