எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்.. சீமான் ஆவேசம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் பங்கெடுக்கிறேன். பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி நாட்டிற்குள்ளே சுட்டுக்கொலை செய்யப்படுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதீத பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வெறியாட்டம்
சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட அக்கொலையாளிகளின் இவ்வன்முறை வெறியாட்டம் கடும் கண்டனத்திற்குரியது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் உடனடியாகக் கைது செய்யபபட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒருமித்த மனநிலையாக இருக்கிறது.

உறக்கமற்ற இரவு பரல்
ஓய்வு, உறக்கமற்று இரவு பகல் பாராது அல்லலுற்று காவல் காக்கும் பணியில் ஈடுபடும் காவலர்கள் படும் பாடுகளும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. மற்ற அரசு ஊழியர்கள் போல சுதந்திரமான வாழ்க்கையோ, அமைதியான வாழ்வியலோ, வார இறுதியில் விடுமுறையோ வாய்க்கப்பெறாது அலைக்கழிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறபோதும் கடமை தவறாது காவல் பணியைச் செய்யும் அவர்களது உழைப்பு மகத்தானது.

காவல் துறை
சமூக அமைதிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு களத்தில் நிற்கும் காவல்துறை பெருமக்கள் பணிச்சுமை தரும் மன அழுத்தம் தாங்காது தற்கொலை செய்துகொள்வதும், காவல் பணியில் ஈடுபடும்போதே தாக்குதலுக்குட்பட்டு கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக வருவது பெரும் மனவேதனையைத் தருகிறது. ஆகவேதான், காவல்துறையினருக்கு ஊதிய உயர்வும், வார விடுமுறையும் தர வேண்டும் என்பதை நெடுநாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.

சமூக நல்லிணக்கம்
துணை ஆய்வாளர் வில்சன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தி அவரது கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், இக்கொலையை மையமாக வைத்து மதத்துவேசத்தில் ஈடுபட முயலும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க சமூக நல்லிணக்கமும், அமைதியும் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications