வேங்கைவயலை ஏத்துகிறீங்களா? இல்லல்ல என் வாழ்க்கையில் ஏன் கழிவ கரைக்குறீங்க.. நிருபரிடம் எகிறிய சீமான்
சென்னை: என் வாழ்க்கையில் ஏன் கழிவ கரைக்குறீங்க என விஜயலட்சுமி விவகாரம் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளிப்பாக பேசியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தான் 2005 ஆம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது சீமானுடன் பழக்கம் ஏற்பட்டது என்றார். இதையடுத்து தன்னை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால் திடீரென தன்னைவிட்டுவிட்டு 2013 இல் கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த புகாரை அவர் 2011 லேயே கொடுத்துவிட்டார். இந்த 12 ஆண்டுகளாக அவ்வப்போது இந்த புகார்கள் வரும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமானை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்னை காவல் நிலைய ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதையடுத்து விஜயலட்சுமியை திருவள்ளூர் போலீஸார் வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் சீமானோ விஜயலட்சுமியை பற்றி திரும்ப திரும்ப பேச எனக்கு அவமானமாக இருக்கிறது என்றார். ஒவ்வொரு முறையும் விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதும் சீமான் கொந்தளித்தபடியே பேசினார். மேலும் தான் லட்சியத்தை நோக்கி பயணிப்பதை இந்த இரு லட்சுமிகளை வைத்து தடுக்க நினைக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும் தான் திருமணம் செய்து கொண்டேன் என்றால் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் அல்லவா, ஏன் இதுவரை ஒரு போட்டோவை கூட காண்பிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் விஜயலட்சுமி இது போன்ற புகாரை இதுவரை 6 பேர் மேல் கொடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு விஜயலட்சுமி கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சீமானை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் தனக்கு பல முறை கட்டாய கருக்கலைப்பை சீமான் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் நடந்த போது சீமான் என்னுடன்தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் விஜயலட்சுமிக்கு மருத்துவம பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து சீமான் நீலகிரிக்கு கட்சி பணி விஷயமாக சென்றிருந்தார். அப்போது அவர் கைது செய்யப்படுகிறார் என்றெல்லாம் கூறியிருந்தனர். ஆனால் தனக்கு எந்த வாரண்டும் வரவில்லை, நான் ஏன் விசாரணைக்கு பயப்பட போகிறேன், நாமெல்லாம் பயப்படுற ஆளா என கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சீமான் கடந்த சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு நாளில் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜரானார். அவர் கூறுகையில் 2011 ஆம் ஆண்டு நடந்த விவகாரத்திற்கு தற்போது வழக்குப் பதிவு செய்வது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சீமான் ஆஜராகாதது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் நேற்றைய தினம் கேள்வி எழுப்பினர். அப்போது சீமான் கொந்தளித்துவிட்டார். அவர் செய்தியாளரிடம், வேங்கைவயலில் மனித கழிவு கலந்ததை நீங்கள் ஏற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என சீமான் கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர், ஆம் எதிர்க்கிறேன் என பதில் அளித்தார். அதற்கு சீமான் அப்போ என் வாழ்க்கையில் மட்டும் ஏன் கழிவ கலக்குறீங்க என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு எழுந்தது.
-
காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வாரி வழங்கியாச்சு! எங்களுக்கு ஒரு நியாயம்? சீறிய CPIM சண்முகம் -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
பாஜக கூட்டணிக்கு போகும் விஜய்? மறுக்காத சிடிஆர் நிர்மல் குமார்.. கொடுத்த விளக்கத்தை பாருங்க -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
Vaiko: குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்? -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு!












Click it and Unblock the Notifications