ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையா? பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது யார்? திருமாவளவனுக்கு சீமான் கேள்வி
சென்னை: சீமான் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை என திருமாவளவன் விமர்சித்த நிலையில் இதற்கு சீமான் பதில் அளித்துள்ளார். சீமான் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நான் என் அண்ணனான திருமாவளவனை மதித்து அமைதியாக செல்கின்றேன். இல்லையெனில், எங்கள் மோதலை எனக்கும் என் அண்ணனுக்குமான மோதலாக மாற்றிவிடுவேன் என்றும் பேசினார்.
விஜயகாந்த் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சீமான் ஆர்.எஸ்.எஸ் பிள்ளை என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் பதில் கூறியதாவது:-

பாஜகவுடன் கூட்டணி வைத்தது யார்?
நான் ஆர்எஸ்எஸ் பிள்ளை என மீண்டும் திருமாவளவன் கூறியதாக சொல்கிறீர்கள். அப்போ, நான் கேட்கிறேன்.. பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினராக ஆனது நானா? இல்லை அவரா?.. சொல்லுங்க.. வாஜ்பாய்க்கு வீர வணக்கம் செலுத்துவது அரசியல் நாகரீகம் என சொல்கிறார்.
நான் என் அண்ணனான திருமாவளவனை மதித்து அமைதியாக செல்கின்றேன். இல்லையெனில், எங்கள் மோதலை எனக்கும் என் அண்ணனுக்குமான மோதலாக மாற்றிவிடுவேன். திராவிடன் மஞ்சள் குளிப்பான். திருமாவளவனை எதிர்க்கவா நான் கட்சி ஆரம்பித்தேன்? விசிக, பாமக, மதிமுகவா எங்களுக்கு எதிரி?..
கிழவனை கைது செய்யாமல்
இங்கு திராவிடர் மற்றும் தமிழருக்கு இடையேயான போர் நடந்து வருகிறது. நான் என் அண்ணன் பேசாததையா பேசி விட்டேன்.. தாய் மண்ணில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளை வெளியிட சொல்லுங்கள்.. இல்லை அனுமதி தர சொல்லுங்கள் நான் வெளியிடுகிறேன்.. பெரியாரை அண்ணாவும், கலைஞரும் பேசாத பேச்சா..
அவர்களை விடவா நான் எதிர்த்து பேசிவிட்டேன் என்பதை கூற சொல்லுங்கள்.. நான் நிறுத்தி விடுகிறேன்.. திராவிடர் கழகத்தில் இருந்து திமுக ஏன் பிறந்தது? இன்னும் இந்த கிழவனை கைது செய்யாமல் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் என பேசியது யார்?.. தமிழ் மொழியை சனியன் மொழி என்று சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா?.. என சீமான் ஆவேசமாக பேசினார்.
தமிழ் மொழி அழிகிறது
தமிழ் மொழி அழிந்துகொண்டு இருக்கிறது. தமிழ் மொழி தேர்வுகளில் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் தோல்வி அடைகிறார்கள். சமீபத்தில் நடந்த டெட் தேர்வில் கூட தமிழில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பெயில் ஆனார்கள். ஏன்.. தமிழ் அழிகிறது. தங்க்லிஷ் வளர்கிறது.
தமிழகம் அயோத்திதாசன் மண், மூவேந்தர் மண், கக்கன் மண், இரட்டைமலை சீனிவாசன் மண், காமராஜர் மண்.. அப்படி இருக்கும் போது எப்படி பெரியார் மண்ணாக இருக்க முடியும். திராவிடர்களா, தமிழர்களா? என்ற முறையில் தான் வரும் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
திராவிடத்தை அழித்தால் தான்
நீங்கள் திராவிடர் என்று சொல்கிறீர்கள்.. நாங்க தமிழர் என்று சொல்கிறோம்.. கீழடி திராவிட நாகரிகம் என்று சொல்கிறீர்கள்.. 2500 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடம் எங்கிருந்தது. அதை தமிழர் நாகரிகம் என சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? திட்டமிட்டு என் அடையாளத்தை, மொழியை அழிக்க திட்டமிடுகிறார்கள். எனவே திராவிடத்தை அழித்தால்தான் தமிழை காக்க முடியும்" என்று பேசினார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications