திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்க… சீமான் வலியுறுத்தல்
சென்னை:திருபுவனம் ராமலிங்கம் கொலையின் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது குடும்பத் துயரில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கிறது.வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
ஒரு உயிரைப் பறித்து அதில் சுகம் காண்பது மிகக் கொடூரமான மனநிலையாகும். எதன்பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக் கொள்ளவோ முடியாது. இந்த கொலையினை எவர் செய்திருந்தாலும் அவர்களை தயவு தாட்சணையின்றி தண்டிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அதேநேரத்தில், இவ்விவகாரத்தைத் தங்களது அரசியல் லாப நோக்கிற்காக கையிலெடுத்து ஆதாயம் பெற மதப்பூசல்களை உருவாக்க முயலும் மத அடிப்படைவாதிகளிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த கொலை வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே அதன் போக்கைத் தீர்மானிப்பது என்பது உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே உதவும் என்ற அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இக்கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
அரசியல் தலையீடற்ற ஓர் நேர்மையான விசாரணையை நடத்தி அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். அப்பகுதியில் மத ரீதியிலான பதட்டங்களை உருவாக்குகிற எச்செயலையும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications