இனி சீமான்தான் "நம்பர் 2".. எடப்பாடிக்கு போன ஷாக் வார்னிங்! அடியோடு மாறுது அரசியல்! அடிச்சு சொல்றாரே
சென்னை: தமிழ்நாடு அரசியலில் மு க ஸ்டாலின் கிட்டத்தட்ட 50 சதவிகித வாக்குகள் எடுப்பார். இரண்டாம் இடத்தில் மோடியை அதிகம் எதிர்ப்பது சீமான்தான். லோக்சபா தேர்தலில் எடப்பாடி தனியாக நின்றால் இரண்டாம் இடம் பிடிக்க போவது சீமான் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் தமிழ்நாடு அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. எதிர்பார்க்காத பல சுவாரசிய திருப்பங்கள் தமிழ்நாடு அரசியலில் நடந்து வருகிறது. அதில் முக்கிய விஷயம் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தால் நாம் தமிழர் கட்சி சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததை வரவேற்கிறோம். ஆனால் நாங்கள் கண்டிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சீமான் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தனித்து விடப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாடு அரசியலில் சீமான் எடப்பாடி பழனிசாமியை முந்துவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில். தெரிவித்துள்ளார்.
அதில், 2024 லோக்சபா தேர்தல் என்பது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். இது சட்டசபை தேர்தல் அல்ல. அப்படி இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மோடியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ஆனால் அவர் மோடியை எதிர்த்து பேச மாட்டார். அல்லது மோடியை ஆதரித்து அரசியல் செய்ய வேண்டும். அதையும் இனி எடப்பாடி செய்ய முடியாது. ஏனென்றால் கூட்டணி இல்லை.
எடப்பாடிக்கு 15 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளன. இதை அதிகரிக்க இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் வாக்கு வேண்டும். ஆனால் அதை எடப்பாடி பெற முடியாது. மோடியை அவர் எதிர்க்காத பட்சத்தில் இஸ்லாமியர்கள் எடப்பாடியை நம்ப மாட்டார்கள். எடப்பாடியை நம்பி அவர்கள் ஏமாற மாட்டார்கள். இத்தனை காலம் இஸ்லாமிய விவகாரத்தில் எடப்பாடி எதுவும் குரல் கொடுக்கவில்லை. பாஜகவின் மசோதாக்களை கூட ஆதரித்து வந்துள்ளார்.

அப்படி இருக்க எடப்பாடியை இஸ்லாமியர்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் சீமான் இஸ்லாமிய கைதிகள் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளார். சீமான் தொடர்ந்து சிறுபான்மையினர் அனுதாபத்தை பெற்று வருகிறார். அதிமுகவிடம் இருந்த சிறுபான்மையினர் வாக்குகள் ஜெயலலிதா மறைவிற்கு பின் இங்கே வந்துவிட்டது. மோடியையும் சீமான் வெளிப்படையாக எதிர்க்கிறார்.
அதனால் தமிழ்நாடு அரசியலில் மு க ஸ்டாலின் கிட்டத்தட்ட 50 சதவிகித வாக்குகள் எடுப்பார். இரண்டாம் இடத்தில் மோடியை அதிகம் எதிர்ப்பது சீமான்தான். இதனால் தேர்தலில் இரண்டாம் ஷேர் எடுக்க போகும் தலைவர் சீமான்தான். எடப்பாடி மோடியை எதிர்க்கவில்லை. அப்படி இருக்க எடப்பாடி இரண்டாம் இடம் வர வாய்ப்பே இல்லை. சீமான் எடப்பாடியை பீட் செய்து இரண்டாம் இடம் வருவார். 2024ல் இது தெரியும்.
சீமானுக்கு 6.3க்கு மேல் வாக்கு வங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தலிலும் அவரின் வாக்கு வங்கி உயர்ந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 38 சதவிகித வாக்கில் இருந்து 13 சதவிகித வாக்குகள் என்ற நிலைக்கு சென்றுள்ளது. அப்படி இருக்க சீமானுக்கு வாக்கு வங்கி உயருகிறது. ஸ்டாலினிடம் இருந்து செல்லும் வாக்குகள் சீமானுக்கு செல்லும். இதுதான் நிதர்சனம்.
இதை யாரும் சொல்ல மாட்டார்கள். சீமானுக்கு அதிமுகவின் பழைய சிறுபான்மையினர் வாக்குகள், பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் கண்டிப்பாக செல்லும். அவருக்கு இப்போது 7 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. எடப்பாடியை மேலும் வலிமை இழக்க செய்து சீமான் மேலே வருவார். இதுதான் நிதர்சனம். அதிமுக தற்போது இரண்டு ஜாதிகளின் கட்சியாக மாறிவிட்டது.












Click it and Unblock the Notifications