வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ன வச்சிருக்கார் பாருங்க.. ஆர்எஸ்எஸ் ஐ விட சீமான் ஆபத்தானவர்.. ராஜீவ் காந்தி
சென்னை: அன்று பெரியார் விதைத்த தமிழர் விதையை சமஸ்கிருத திணிப்பை விட, இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு பெரிது என்றால் சீமான் ஆர்.எஸ்.எஸ்சை விட ஆபத்தானவர். அவர் நேற்று வாட்ஸ் அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் என்று தெரியுமா என ஆவேசமாக சீமானின் ஸ்டேட்டஸ் படத்தை காண்பித்து ராஜீவ் காந்தி பேசினார்.
பெரியாரை ஆதரித்து பேசி வந்த சீமான், சமீப நாட்களாக பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். பெரியாரை விமர்சித்து பேசுவதால், திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் இன்று திமுகவின் மாணவர் அணி தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாடுக்களை வைத்தார்.

ராஜீவ் காந்தி கூறியதாவது:- சீமான் தனது வாட்ஸ் அப்பில் நேற்று இரவு என்ன பதிவு போட்டு இருக்கிறார் என்று பாருங்கள். சமஸ்கிருத திணிப்பை விட, இந்தி திணிப்பை விட, பெரியாரிய திணிப்பு ஆபத்தானது என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். யோசித்து பாருங்க.. தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும், பட்டம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, சமஸ்கிருதத்தில் இருந்தது தான் தமிழ் உருவாகியது என்ற கோட்பாடு சொல்லும் போது, தமிழ் தனித்த மொழி என்று அரசியல் களத்தில், பண்பாட்டு களத்தில் வென்று நாட்டியவர் தந்தை பெரியார்.
அன்று பெரியார் விதைத்த தமிழர் விதையை சமஸ்கிருத திணிப்பை விட, இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு பெரிது என்றால் சீமான் பேசுகிறார் என்றால், அவர் ஆர்.எஸ்.எஸ்சை விட ஆபத்தானவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியாக மட்டும் இல்லை.. இந்திய அரசியலில் தமிழ்நாடு, தமிழர் உரிமை, ஈழ அரசியலில் தேசிய இன உரிமை என அத்தனையும் காட்டிக்கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.
அவரிடம் இருந்து எண்ணிலடங்காதவர்கள் வெளியில் வந்து இருக்கிறார்கள். எங்களை போன்ற இளைஞர்களின் அறிவு, அரசியல், பொருளாதாரத்தை சுரண்டியிருக்கிறார். இன்றைக்கும் பல லட்சம் இளைஞர்கள் அவர் சொல்வதுதான் சரி என நம்புகிறார்கள். எத்தனை கதைகள், இட்லிக்குள் ஆமைக்கறி கொடுத்தார். மான் சுடுவதற்கு தடை இருந்த போது, மானை சுட சொல்ல பிரபாகரன் உத்தரவிட்டார் என சொல்லுவது அந்த அமைப்பை கொச்சைப்படுத்துவது.
போராட்ட களத்திற்கு போன போது உல்லாச பயணமாக இருந்தேன் என்று பேசுவது தமிழீழ விடுதலை ஆதரவு நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியிருக்கிறார். சொல்லப்போனால், ஒரு மாவீரனை ஸ்டார் ஹோட்டல் செஃப் போல காட்டி இளைஞர்களிடம் இருந்த போராட்ட எழுச்சியை தமிழ் தமிழர் உணர்வை மட்டுப்படுத்தி, தன் வயிறும் தன் குடும்பமும் வளர்வதற்கு மட்டும் சீமான் இருக்கிறார். இது ஆபத்தான மன நோய் மட்டும் இல்லை. அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான்" இவ்வாறு ராஜீவ் காந்தி விமர்சித்து பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications