முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு.. முக முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய பின் உருக்கமான பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், மு.க முத்துவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறினார். மேலும், கொள்கை நிலைப்பாடு, அரசியல் பயணம் என்பது வேறு வேறாக இருந்தாலும், பாசம் என்பது ஒன்று தானே என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இவருக்கு சிவகாம சுந்தரி என்ற மனைவியும், அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர்.

seeman-meets-cm-mk-stalin-heartfelt-interview-after-offering-condolences-on-the-death-of-mk-muthu

மு.க. முத்துவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மு.க முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல, மு.க அழகிரி, மு.க தமிழரசு உள்பட மு.க முத்துவின் நெருங்கிய உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரைப்பலங்கள் என பல முக்கிய பிரமுர்கள் மு.க முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மு.க முத்து மறைவுக்கு ஸ்டாலினை சந்தித்து சீமான் ஆறுதல் கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-

seeman-meets-cm-mk-stalin-heartfelt-interview-after-offering-condolences-on-the-death-of-mk-muthu

மு.க முத்து மறைவுக்கு ஸ்டாலினை சந்தித்து இரங்கல் தெரிவித்தேன். எப்படி இருந்தாலும் இது ஒரு பெருந்துயரம்.. இந்த துயரத்தினை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். மு.க முத்து மறைவு அறிந்து இரங்கல் அறிக்கை வெளியிட்டேன். பிறகு நான் துயரத்தை பகிர்வதற்காக வந்தபோது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதனால் இன்று வந்து சந்தித்தேன். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இரங்கல் தெரிவித்தேன்.

அரசியல் கொள்கை, நிலைப்பாடுகளை தாண்டி உறவு என்று ஒன்று இருக்கிறது. அழகிரியை அண்ணா என்று தான் அழைப்பேன்.. அவர் என்னை போடா வாடா என்று தான் அழைப்பார். தயாளு அம்மாவை நான் அம்மான்னு தான் கூப்பிடுவேன்.. கொள்கை நிலைப்பாடு, அரசியல் பயணம் என்பது வேறு வேறாக இருந்தாலும், பாசம் என்பது ஒன்று தானே. அந்த அடிப்படையில் தான் நான் நீண்ட நேரம் வெயிலில் பசியோடு நின்றபோது மயங்கி விழுந்துவிட்டேன்.

அப்போது என்னை உடனே சந்தித்து என் உடல் நலனை பாத்துக்கோங்க என்று சொன்னவர் ஸ்டாலின். என் தந்தை இறந்தபோதும் என்னை சந்தித்து ஆறுதலாக இருங்க என்று சொன்னார் ஸ்டாலின். இது எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+