சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கதறல்".. ஸ்டாலின் நினைச்சிருந்தா.. அத்தோடு விட்டிருக்கலாம்.. ஆனால் விடல.. உணர்ச்சிவசப்பட்ட சீமான்!

முதல்வருக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: என் அப்பா இறந்ததுக்கு முதல்வர், ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அவர் நினைச்சிருந்தால், இதோடு விட்டிருக்கலாம்.. அதுவே போதுமானது என்றுதான் நான் நினைச்சேன்.. அதுவே எனக்கு ஆறுதலாகத்தான் இருந்தது.. ஆனால், எனக்கு போன் பண்ணி என்னை அழைத்து பேசியதில், நான் ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்." என்று முதல்வர் ஸ்டாலின் குறித்து சீமான் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

சீமான் அரசியலை பொறுத்தவரை, முதல் எதிரியே திமுகதான்.. முதல் குறியே முக ஸ்டாலின்தான்.... சீமான் கட்சி ஆரம்பித்த இந்த 10 வருஷமும், ஸ்டாலினை பற்றின பேசிய பேச்சுக்கள்தான் அதிகம்..

அதிகமாக கிண்டல் செய்ததும் ஸ்டாலினைதான்.. ஸ்டாலினைபோலவே பேசி காட்டுவார்.. பாடி காட்டுவார்.. நடித்து காட்டுவார்.. காரணம் இது ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபரின் மீதான கோபம் இல்லை. திமுகவின் மீதான கோபம்..!

அரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ்...வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார் - எங்கே தெரியுமா அரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ்...வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார் - எங்கே தெரியுமா

எப்போதுமே அரசியல்ரீதியாக பார்த்தால் வழக்கமாக திமுகவும், அதிமுகவும்தான் முட்டிக்கொள்ளும்.. ஆனால், கருத்தியல்ரீதியாக பார்த்தால் திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும்தான் போட்டியே நடக்கும்.. இன்னும் சொல்லப்போனால், அதிமுகவைவிட, திமுகவை அதிகம் எதிர்த்தது சீமான்தான்..

திமுக

திமுக

அதனால்தான், ஸ்டாலினுடன் நேருக்கு நேராக இந்த முறை மோதுவது என்று சீமான் சேலஞ்ச் செய்தார்.. சொந்த தொகுதியில் ஸ்டாலினை தோற்கடிக்காமல் போக மாட்டேன் என்றும் சீறினார்.. நேருக்கு நேர் கருத்தியல் ரீதியாக மோதுவாம் வா, என்று ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கொண்டே இருந்தார்.. ஆனால், தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், சீமான் ட்வீட் போட்டு ஸ்டாலினுக்கு வார்த்து சொல்லி இருந்தார்.. "தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்!" என்றார்.

தந்தை

தந்தை

இப்படிப்பட்ட சூழலில்தான் சீமானின் தந்தை காலமானார்.. இதையடுத்து, ஸ்டாலன் சீமானுக்கு போனை போட்டு ஆறுதல் சொன்னார்.. ஸ்டாலினின் குரலை கேட்டதுமே, சீமான் அவரிடம் கதறி அழுதார்.. நீங்க என் கூட துணையா இருக்குறது எனக்கு ரெம்போ பெருமையா இருக்கு என்று கூறி சீமான் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு ஸ்டாலின், ஒரு இரங்கல் அறிக்கையும் விடுத்திருந்தார்.. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது..!

பேச்சு

பேச்சு

இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலினை சீமான் நேரில் சென்று சந்தித்து உள்ளார்.. அவருடன் டைரக்டர் பாரதிராஜாவும் சென்றிருந்தார்... பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.. முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சீமானும், பாரதிராஜாவும் செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது சீமானிடம், "தமிழகம், தமிழ்நாடு பெயர்" என்ற விவாதங்கள் நடந்து வருவதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

அதற்கு சீமான், "இப்படி ஒரு விவாதத்தை முதன்முதலில் தொடங்கி வெச்சதே நான்தானே.. தந்தை பெரியார் சொன்னது போல, இந்தியான்னு ஒரு நாடே கிடையாது.. இனி எப்போதும் இருக்க போவதும் இல்லை.. அதுவும் வெள்ளைக்காரர்கள் உருவாக்கப்பட்டது. இது எங்கள் தமிழர் நாடு.. பாரத நாடே பைந்தமிழர் நாடு.. நாங்கள் நாகர்கள்.. அதனால்தான் நாகாலாந்து, நாகப்பட்டினம், நாகர்கோவில் என்று நாகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழர்

தமிழர்

நாடற்றுவர்கள் இங்கு வந்து உட்கார்ந்துக்கிட்டு, என் நாடு என்று சொந்தம் கொண்டாடிக்கிட்டு, பிரிக்கிறான்.. நான் ஒரு தேங்காயை எடுத்து, உடைச்சி சில் எடுக்கிறவன் இல்லை.. மொத்த தேங்காயும் என்னுடையது" என்றார். இதையடுத்து, "முதல்வரை கடந்த காலங்களில் நிறைய விமர்சித்து வந்தீர்கள்.. இப்போது நடந்த சந்திப்பு குறித்து எப்படி பார்க்கிறீர்கள்" என்று செய்தியாளர்கள் அடுத்த கேள்வியை எழுப்பினர்.

பெருமை

பெருமை

அதற்கு சீமான், "ரொம்ப பெருமைக்குரியதா நான் பார்க்கிறேன்.. என் அப்பா இறந்ததுக்கு முதல்வர், ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அவர் நினைச்சிருந்தால், இதோடு விட்டிருக்கலாம்.. அதுவே போதுமானது என்றுதான் நான் நினைச்சேன்.. அதுவே எனக்கு ஆறுதலாகத்தான் இருந்தது.. ஆனால், எனக்கு போன் பண்ணி என்னை அழைத்து பேசியதில், நான் ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்..

இணக்கம்

இணக்கம்

அதுக்காகவும், அவரை நேரில் சந்தித்து பேசணும்னுதான் நினைச்சிருந்தேன்.. இந்த சந்திப்புக்கே என் அப்பா தான் (பாரதிராஜா), வா போய்ட்டு வந்துடுவோம்ன்னு இங்கே கூட்டிட்டு வந்தார்.. அரசியல்ல ஆயிரம் கருத்துகள் இருக்கலாம்.. முரண்கள் இருக்கலாம்.. ஆனால், எல்லாத்தையும் மீறி இணக்கம் உள்ளது.. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.." என்றார்.

English summary
Seeman praises CM MK Stalin today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X