திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கட்டும்.. நான் ஓடிப்போகலை.. அந்த பயம் இருக்கட்டும்.. சீமான் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி கூறும் குற்றச்சாட்டில் உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள். அதற்கு பயப்படும் ஆளில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி கடந்த பல ஆண்டுகாலமாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருப்பூரில் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், உன் மேல வைக்கிற குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால் நீ விளக்கம் சொல்ல தேவையில்லை என்பது என் நிலைப்பாடு என்றார்.

Seeman Press meet in Tirupur about Vijayalakshmi complant

கருத்துப்பெட்டகன் சாவி திறவுகோள் என்பதே நல்ல கேள்விதான். நல்ல பதிலின் தாயே நல்ல கேள்விதான். எனவே நீங்கள் நல்ல கேள்விகளைத்தான் கேட்க வேண்டும். இது குற்றச்சாட்டு என்று நம்பியிருந்தால் இத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின்தொடர்வார்கள். உங்களுக்கு தெரியுதா? அவதூறுக்கு அஞ்சியவன் அற்ப வெற்றியைக் கூட தொட முடியாது. அது ஏன் தேர்தல் நேரத்தில் மட்டும் இது பேசப்படுகிறது என்று கேட்ட சீமான், நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்.

11 ஆண்டு காலமாக என்மீது ஒரே குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஊடகங்கள் அதை ஏன் ரசிக்கிறீர்கள். எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. கனவு இருக்கிறது என்னைச்சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள். திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் பெண் மீது என்னை காதலித்துவிட்டு ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு முன் வைத்தால் என்னை காறி துப்ப மாட்டார்களா? அதை திரும்ப திரும்ப பேசிச்கொண்டிருக்கிறார்கள்.

இதே போல குற்றச்சாட்டு 5 பேர் இருக்கிறார்கள் அதை நான் உங்களுக்கு அனுப்பட்டுமா? எனவே அவசியமான கேள்விகளை மட்டுமே கேளுங்கள். நான் உதிர்க்கும் வார்த்தையானது வருங்கால தலைமுறையை வழி நடத்தும் தத்துவமாக இருக்க வேண்டும். ஒரு பொன்மொழியாக புரட்சிகர பாதையாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நீங்கள் இதையை சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்காகத்தான் அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னை திருப்பி விட நினைக்கிறார்கள்.

திருப்பூரில் நேற்று கூடிய கூட்டம் எல்லோருக்கும் தெரியும். காவல் நிலையத்தில் மனு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் விசாரிப்பார்கள் அது காவல்துறையின் கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள். அதற்கு பயப்படும் ஆளில்லை. நான் வேறு ஊருக்கு ஓடிப்போகவில்லை. வேறு மாநிலத்திற்கும் ஓடிப்போகவில்லை என்று சொன்னார் சீமான்.

அதற்கு செய்தியாளரோ அதிமுக ஆடசியில் நடவடிக்கை இல்லை திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்வதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சீமானோ, நடவடிக்கை எடுங்களேன் என்று சொன்னார். என்னதான் எடுப்பீங்க எடுங்களேன் நானும் பார்க்கறேன் என்று சொன்ன சீமான் அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+