தனித்துப் போட்டியிட்டு '....' முடியாது- அண்ணன் திருமா பேச்சுக்கு தம்பி சீமான் சொன்ன அடேங்கப்பா பதில்
சென்னை: தேர்தல்களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்டு என்ன சாதித்தாய்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு சீமான் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சட்டசபை, லோக்சபா, உள்ளாட்சி தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு தோல்வி அடைந்து வருகிறது. ஆனாலும் எந்த காலத்திலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணியே இல்லை என்பதில் அக்கட்சி உறுதியாகவும் உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் தனித்துதான் போட்டி என அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி.

திருமாவளவன் அட்டாக்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், எங்களுக்கு திமுகவும் பிடிக்காது; அதிமுகவும் பிடிக்காது. எங்களுக்கு காங்கிரஸும் பிடிக்காது; பிஜேபியும் பிடிக்காது. அப்புறம் வேற என்ன... போற? இதைவிட முட்டாள்தனமான ஸ்டேட்மெண்ட் வேற எதுவும் இருக்க முடியாது. எங்களுக்கு திமுக, அதிமுக மேல 100% உடன்பாடு இருக்கிறதா? முரண்பாடே இல்லையா? காங்கிரஸுடன் உடன்பாடா இருக்கிறது எங்களுக்கு? என பேசினார்.

சீமான் பதில்
இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதில்: அண்ணன் திருமாவளவன் பேசியது அவரது கருத்து. அந்த கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. எங்க அண்ணன் திருமாவளவன் பேசிய பழையது எல்லாம் இருக்கிறது. 4 சீட்டுக்காக 40 முறை இவர்களிடம் நடையாய் நடக்கனும்; மண்டியிடனும்; கெஞ்சனும் என திருமாவளவன் பேசியது எல்லாம் இருக்கிறது. அப்படி எல்லாம் அண்ணன் திருமாவளவன் பட்ட அசிங்கத்தை அவமானத்தை தம்பி நான் படக் கூடாது என நினைக்கிறேன்; அவர்களிடம் இருந்து நாங்கள் படிப்பினையைப் பெற்றிருக்கிறோம்.

நான் போராடுகிறேன்...
இந்த களம் ஒன்றும் புதியதும் கிடையாது; அவர்கள் நின்றதுதான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் உட்கார்ந்து எங்கள் காதுகளில் படிப்பிச்சதுத்ஆன் இந்த அரசியல். பயிற்சி கொடுத்த ஆசிரியர், ஓடி பதக்கம் வாங்குவது இல்லை. கற்றுக் கொண்ட மாணவன்தான் ஓடிப் பதக்கம் வாங்குவான். அண்ணன் திருமாவளவனால் முடியாது என நினைத்தால் அது அவரது கருத்து. தம்பி, நான் போராடிப் பார்க்கிறேன்.

கெஜ்ரிவால் போல ஜெயிச்சுடுவேன்
வெல்லவே முடியாது என யாரையும் சொல்லக் கூடாது; அரவிந்த் கெஜ்ரிவால் அப்படித்தான் பஞ்சாப்பில் நின்றார்; கெஜ்ரிவால் அப்படித்தான் டெல்லியில் நின்றார். ஆக நான் வெல்ல முடியாதா? என்பதுதான் என் கேள்வி. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். அதில் என்ன இருக்கிறது. தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை எதிர்கொள்ள தயார் இல்லை. தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கவும் தயாராக இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications