விஜய் மாநாடுக்கு கூட்டமா? நயன்தாரா கடை திறந்தப்போ கூட 4 லட்சம் பேர் கூடினாங்க.. சீமான் கொடுத்த பதில்
சென்னை: விஜய் கட்சி மாநாட்டுக்கு கூடிய கூட்டம் பற்றி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நயன்தாரா கடை திறந்ததற்கு கூட 4 லட்சம் பேர் கூடினார்கள், சினிமா நடிகனைப் பார்க்க வரும் கூட்டமும் கொள்கைக்காரர்களின் கூட்டமும் ஒன்றா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? இதற்காக திராவிடம் வேண்டும்.. இதற்காக தமிழ் தேசியம் வேண்டும் என்று யார் விளக்கம் சொல்லுவார்கள்? விஜய்யா அவருக்கு கீழ் உள்ள தம்பிகளா? விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையா?: மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? திமுக கூடத்தான் ரொம்ப காலமாக சமூக நீதி பேசுகிறது. வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? கொலைகாரன் ஒருவனைத்தான் கொல்வான், குடித்தால் பல பேர் தாலி அறுபடும் என மதுக்கடைகளை மூடச் சொல்வது தமிழ் தேசியம்.
மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. தமிழ் எங்கள் கொள்கை. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் பயிற்று மொழி, வேண்டுமென்றால் பிற மொழிகளை கற்கலாம். நான் சொல்வது குட்டிக்கதை அல்ல, வரலாறு.
பெற்ற தாயாகவே இருந்தாலும்: திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறானவை. வில்லனும், கதாநாயகனும் எப்படி ஒரே ஆளாக இருகக் முடியும்? இரண்டும் ஒருவரின் கொள்கையாக இருக்க முடியாது. ஒன்று கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதிக்கொடுப்பவரை மாற்றுங்கள். என்னைப் பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும், கடவுளே ஆனாலும் என் கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரிதான். அப்புறம் அண்ணன் என்ன? தம்பி என்ன? ரத்த உறவை லட்சிய உறவுதான் மேலானது. குடும்ப உறவை விட கொள்கை உறவுதான் மேலானது.” என்றார்.
விஜய் மாநாட்டுக்கு கூடிய கூட்டம்: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பல லட்சக்கணக்கானோர் திரண்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “கூட்டம் எல்லாருக்கும் வரும். திரைப்பட நடிகனைப் பார்க்க வரும் ரசிகன் வேறு, கொள்கைக்காரன் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது தவறு.
நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர்: சேலத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு 40 பேர் வந்தார்கள். கடை திறக்க வந்த நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் வந்தார்கள். விமானப்படை சாகசத்தைப் பார்க்க 15 லட்சம் பேர் வந்தார்கள். எங்கள் தலைவன் எங்களுக்கு கற்பித்தது.. 5 பேர் கூடினால் சாதிக்கலாம்.. 50 பேர் கூடினால் விவாதிக்கலாம். எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். எனது கூட்டம் 36 லட்சம் பேர். இப்போ எது பெரிய கூட்டம். இன்னொரு நடிகர் அழைத்தாலும் கூட்டம் வரும். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டம் இப்போது கூடிவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சி மாநாட்டில் பேசும்போது திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் எனக் கூறினார். அதனை விமர்சித்து வரும் சீமான், நேற்று நடந்த கூட்டத்தில் விஜய்யை கடுமையாக அட்டாக் செய்து பேசினார். இந்நிலையில், இன்றும் பிரஸ் மீட்டில் விஜய்யை தாக்கிப் பேசியுள்ளார் சீமான்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்!












Click it and Unblock the Notifications