சாவுன்னா என்ன தெரியுமா? பிரபாகரன் என் தோள்மேல் கை வெச்சு சொன்னது இதுதான்!சீமான் வெளியிட்ட புது தகவல்
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல் என்கிறார் நாம் தமிழர் சீமான்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்பது இலங்கை ராணுவத்தின் அறிவிப்பு. இதற்கு சாட்சியமாக பிரபாகரன் உடலை காட்டியது இலங்கை ராணுவம். ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரபாகரன் மரணம் அடையவில்லை என கூறி வந்தார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். இதனை பிரபாகரன் குடும்பத்தின் அனுமதியுடன் அறிவிக்கிறேன் என்றார். நெடுமாறனின் இந்த அறிவிப்பு உலகத் தமிழரிடையே இன்னும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் பிள்ளைகளை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் ஓடிப் போயிருக்க மாட்டார். அப்படி உயிரோடு இருப்பதை நம்ப முடியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் புதிய தலைமுறை டிவியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் சீமான், பிரபாகரன் குறித்து கூறியதாவது: பிரபாகரன் ஒன்றும் திரைப்பட நடிகர் அல்ல. எப்ப வரனுமோ அப்ப வருவேன் என சொல்லக் கூடியவர் அல்ல. இயற்கையில் பேரன்புக்காரர் பிரபாகரன். இந்த இனத்தின் மீதான அன்பும் காதலும்தான் பிரபாகரனை ஆயுதம் எடுக்கவே வைத்தது.
பிரபாகரனின் மனைவி மதிவதினியின் அக்கா- பெரிய அண்ணி டென்மார்க்கில் இருக்கிறார். மச்சானும் இருக்கிறார். அவர்கள் பிரபாகரனின், பாலச்சந்திரனையாவது என்னிடம் கொடுங்கள் வளர்த்து கொள்கிறேன் என கேட்டனர். ஆனால் பிரபாகரன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. என்னை நம்பி, என் மண்ணின் தாயக விடுதலைக்கு எண்ணற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீர விதைகளாகக் கொடுத்தனர். என்பிள்ளைகளும் அதேபோல் போர்க்களத்தில் போராடி வீரச்சாவை தழுவ வேண்டும்.
இறுதி காலத்தில் மக்களோடு மக்களாகத்தான் பிரபாகரன் மகன் இருந்தார். அதில் எங்கள் துரோகிகள் சிலர்தான் பிரபாகரன் மகன் என காட்டிக் கொடுத்தனர். பிரபாகரன் மகன் ராணுவ கஸ்டடியில் இருக்கிறார் என சொல்லப்பட்டது. பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்கக் கூடாது என சொன்ன ஆள் யார் என்பதும் தெரியும். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் நெஞ்சில் 5 குண்டுகள்.. அதற்கெல்லாம் யாரும் பாவம் பார்க்கவில்லையே.
பிரபாகரனைப் பொறுத்தவரை எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தபோதும் கூட, நாட்டை விட்டு போகமாட்டேன் என்பதுதான் அண்ணனின் நிலைப்பாடு. தனக்காக, தன் நாட்டு விடுதலைக்காக, தன் கட்டளையை ஏற்று பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பல ஆயிரம் போராளிகள் உயிர் நீத்ததை பார்த்த பிரபாகரன், தன் உயிரை பாதுகாத்து தற்காத்து ஒரு இடத்தில் உயிரோடு இருப்பார் எனில் பிரபாகரனை நீங்கள் ரொம்பவே சிறுமைபடுத்துறீங்க. தன் உயிருக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிற கோழை அல்ல பிரபாகரன்.
எனக்கு தோள்மேல கை வெச்சு சொன்னது, சாகத் துணிந்துட்டீங்கன்னா எல்லாம் சாதாரணமா போய்டுவீங்க.. அந்த திமிரில்தான் நான் எதற்கும் பயப்படாமல் சண்டை செய்கிறேன். எப்படி இருந்தாலும் சாகப்போகிறோம்ல.. எதுக்கு சரணடைந்து சாகனும்? சண்டைபோட்டு செத்துடுவோம். இப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என ஏன் சொல்லப்படுகிறது என்பது சிறிதுநாள் கழித்து அனைவருக்கும் தெரிந்துவிடும்.
வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போல பிரபாகரனை எங்கள் ஆள்னு பாஜக கொண்டாட நினைக்கலாம். தமிழ்த் தேசிய அணுக்களோடு கலந்துவிட்ட மாபெரும் வீரன் பிரபாகரன். பாஜகவுக்கும் பழ. நெடுமாறனுக்கும் என்ன தொடர்பு என்பதை எப்படி பேசுவது? அதை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இப்ப 13-வது திருத்தத்தை பாஜக பேசுகிறது. 35 ஆண்டுகள் கழித்து பேசுகிறார்கள். அந்த ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தால்தான் அத்தனை பிரச்சனையுமே உருவானது. அப்போது அனுப்பி வைக்கப்பட்ட அமைதிப்படை எங்கள் மண்ணில் செய்த அட்டூழியத்தால்தான் ராஜீவ் மரணம் நிகழ்ந்தது. பொற்கோவிலுக்குள் இந்திரா காந்தி செய்ததற்கு எதிர்வினை அவரது மரணம். என் தாய்நிலத்தில் என்ன செய்தீர்களோ அதற்கு எதிவினை மரணம் என நிகழ்ந்தது. அதை காரணம் காட்டி மொத்த இனத்தையுமே அழிச்சு முடிச்சீங்க. இவ்வாறு சீமான் கூறினார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications